ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!
ஃப்ரீலான்சர் எடிட்டர் மூலமாக இந்த ஜனநாயகம் திரைப்படம் திருடப்பற்று மற்ற கூட்டாளிகள் மூலமாக இது திரைப்படமாக வெளியானதாகவும் தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தமிழக சைபர் கிரைம் காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில ஏற்கனவே ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது முக்கிய குற்றவாளிகள் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
உதவி எடிட்டராக ஃப்ரீலான்சராக பணியாற்றிய ஒருவர் ஜனநாயகன் எடிட்டிங் ஸ்டுடியோக்குள் நுழைந்து படத்தை திருடியதாகவும் அதை கிளவுட் மூலமாக சமூக வலைதளத்தில மற்ற இருவர் மூலமாக பரப்பியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்ட விரோதமாக கசிவிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்திருப்பதாகவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 11 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் விரிவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் டிஜிட்டல் தடங்கள் அடிப்படையாக கொண்டு இந்த மூன்று நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதன்மை குற்றவாளி வேறு ஒரு திரைப்படத்தில உதவி எடிட்டராக பணியாற்றி வருபவர் என்றும், இவர் ஜனநாயகன் திரைப்படம் எடிட்டிங் செய்யப்பட்ட ஸ்டுடியோவுக்குள் முறையற்ற வகையில் நுழைந்து அந்த திரைப்படத்தின் காட்சிகளை திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐகோட்டில் ஜனநாயகன் படக்குழு..! படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக முறையீடு..!
இவ்வாறு திருடப்பட்ட தரவுகளை திரைப்படமாக மாற்றி மற்ற கூட்டாளிகளுக்கு அனுப்பி இணையத்தில் பரப்பியது உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட திருட்டு மற்றும் டிஜிட்டல் தரவு திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்தியில் இந்த கைது நடவடிக்கை பெரும் பரப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நிலையில், புகார் அளிக்க இணைதல முகவரியையும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். உறுதியான இறுதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்துக்கு கிரீன் லைட்..! விநியோகஸ்தர்கள் தரப்பு முடிவால் நிம்மதி பெருமூச்சில் TVK இளசுகள்..!