×
 

‘ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும்’..!! கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி 'AK' நெத்தியடி பேச்சு..!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து நடிகர் அஜித்குமார் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் முதன்முறையாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.

60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிகழ்வு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தால் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி, 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் அளித்தார். இருப்பினும், ஒரு பெண் தனது கணவரின் இழப்பீட்டை திரும்ப அளித்த சம்பவம் சர்ச்சையைத் தூண்டியது.

இதையும் படிங்க: திருப்பதியில் 'AK'..!! தல.. தல.. என கத்திய ரசிகர்கள்..!! உடனே அவர் செய்த தரமான செயல்..!!

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித்குமார் தனது மனதைத் திறந்தார். “கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு” என்று அவர் தெளிவாகக் கூறினார். ரசிகர்களின் எல்லையற்ற அன்பே இத்தகைய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. “கூட்டத்தால் நாம் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாகக் காட்டுகிறது” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

https://x.com/i/status/1984292742869193105

மேலும் மீடியாவின் பங்கையும் அவர் சாடினார். “படங்களின் முதல் நாள் ஷோவை ரசிகர்கள் என்ன செய்தார்கள் என மீடியா பெரிதுபடுத்துகிறது. இது ரசிகர்களின் மனதை மாற்றுகிறது” என்று குறிப்பிட்ட அஜித், கிரிக்கெட் போட்டிகளில் நெரிசல் ஏற்படாததை எடுத்துக்காட்டி, “தியேட்டர்கள், நிகழ்ச்சிகளில் ஏன் இப்படி நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். “ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி யார் என்பதைக் காட்டும் சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும், அதனால் என்ன ஏற்படுகிறது என்றால், ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை விரும்புகிறோம். அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம் என அவர் கூறினார்.

https://x.com/i/status/1984277034642915700

தனிப்பட்ட வாழ்க்கையையும் பகிர்ந்த அஜித், “ரசிகர்களின் அன்புக்கு நன்றி. ஆனால் அதே அன்பால் குடும்பத்துடன் வெளியுலகம் செல்ல முடியாது. மகனைப் பள்ளிக்குக் கொண்டு போகவும் தடை” என்று வருத்தமாகக் கூறினார். “அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. கூட்ட நெரிசல் தேவையில்லை” என அறிவுறுத்தினார்.

அஜித்குமாரின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பாராட்டப்படுகின்றன. “நெத்தியடி” எனவும் "தல தல தான்".. "மக்கள் மீது அன்பு கொண்டவரின் உண்மையான கருத்து" எனவும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமூகத்தில் கூட்ட நெரிசல்களைத் தடுக்க மென்மையான அணுகுமுறையை அவர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Foreign-ல மட்டும் இல்ல தமிழ்நாட்டிலும் 'தல' கிங் தான்..! கோவையில் ரேஸ் கார் ஓட்டி அசத்திய நடிகர் அஜித் குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share