×
 

#BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். 

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார். உழைப்பாளி, நம்மவர், மகளிர் மட்டும், பூவே உனக்காக , நேருக்கு நேர், ரோஜா மலரே உள்ளிட்ட பல திரைப்படங்கள் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். 

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அவருடைய அந்த சிரிப்பு என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கக்கூடிய வகையிலே வித்தியாசமாக நடிக்கக்கூடியவர். . அவரது மறைவு என்பது தமிழக திரை உலகுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே ஒரு சோகமான செய்தியாக பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் வெளியாகி பல புகழ்பெற்ற பல திரைப்படங்களிலே அவர் நடித்திருக்கின்றார். அவர் ஏற்கனவே சின்னத்திரையிலும், காமெடி ஷோக்களிலும் நடுவராக இருந்திருக்கின்றார். 

மதன் பாப் வெறும் நடிகர் மட்டும் கிடையாது, இசையமைப்பாளராகவும் பாடகராகவும் அறியப்பட்டவர். அவர் இயல்பில் ஒரு குத்துச்சண்டை வீரராகவும் கூட அவர் இருந்ததாக கூறப்படுகிறது. திரை பிரபலங்கள் மற்றும் அவருடன் நடித்தவர்கள் , ரசிகர்கள் ஆகியோர்  அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ரசிகர்களை இடையழகால் சொக்க வைத்த நடிகை சான்வி மேக்னா..!

இதையும் படிங்க: சேலையில் ஜொலிக்கும் பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி..! ஜில்லுன்னு ஒரு கிளிக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share