×
 

தொடையழகி ரம்பா கம்பேக்... ரம்பா ராக்... ஹீரோயின்ஸ் ஷாக்...இனி தான் ஆட்டமே..!

சின்னத்திரையில் வலம் வரும் ரம்பா, மீண்டும் வெள்ளிதிரைக்கு வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்களின் அழகுக்கு ஐஸ்வர்யாராய், இஞ்சி இடுப்பழகி என்றால் அனுஷ்கா, சிரிப்பின் அழகு என்றால் திரிஷா, கர்ஜனையின் வெளிப்பாடு என்றால் ரம்யா கிருஷ்ணன், குழந்தை முகம் கொண்ட அழகி என்றால் ஹன்சிகா, குடும்ப குத்துவிளக்கு தேவயானி, என பல ஹீரோயின்கள் பல பெயர்களைப் பெற்றாலும்  இன்றளவும் தொடை அழகி என்ற பெயரை காப்பாற்றி தன்வசம் வைத்திருப்பவர் நடிகை ரம்பா. 

அந்தப்புரத்து மகராணி  என்ற பாடலை இப்பொழுது கேட்டாலும் கார்த்தி மற்றும் ரம்பா ஆடிய அந்த நடனமே நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு அழகிற்கு பெயர் போனவர் நடிகை ரம்பா. இப்படிப்பட்ட ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம்   1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?

தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்த ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இந்திரக்குமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இதனால் தற்போது வெள்ளித்திரையில் இருந்து விலகி சின்னத்திரையில் பல ஷோக்களுக்கு நடுவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் ரம்பா வெள்ளித்திரையில் தோன்றுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது மக்கள் தொடர்பாளர் ரியாஸும் ரம்பா; கம்பேக் கொடுக்கவிருப்பது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில்,  ``வெள்ளித்திரையில் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார் ரம்பா. பன்முகத்தன்மை நடிப்பு திறன் கொண்ட ரம்பா தற்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் புதிய கோணங்களில் அணுகுவதற்கும், மக்களிடம் அர்த்தமுள்ள வகையில் அவர் கனெக்ட்டாகவும் வழிவகுக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், தொடையழகி ரம்பா வெள்ளித்திரையில் இறங்கினால் மற்ற ஹீரோயின்களுக்கு வேலை இருக்காதே என தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share