×
 

உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

நண்பர் உதயநிதி அழைத்தால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.


நண்பர் உதயநிதி அழைத்தால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்'  படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசுகையில், "டிடி ரிட்டர்ன்ஸ் பழைய சந்தானத்தை வெளியே கொண்டு வர வைக்கும். இந்தப் படத்தில் யூடியூபர்ஸ் பற்றி நல்லவிதமும் இருக்கிறது. கெட்டவிதத்தையும் படத்தில் சொல்லியுள்ளோம். இப்படத்தில் 'கோவிந்தா கோவிந்தா' பாடலை கிண்டல் செய்யவில்லை. நீதி மன்றம் சென்சார் சொல்றதைதான் கேட்க முடியும்.



நான் பெருமாள் பக்தர். எனக்கு முதல் பாடல் கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அப்பாடலை வைத்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பெருமாள் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் திருப்பதிக்கு கீழ் இருந்து மேல் நடந்து செல்வேன். தற்போது எல்லையில் பதற்றம் இருக்கிறது. ஒருவேளை ரிலீசை ஒத்தி வைக்க வேண்டும் என்றால் செய்துதான் ஆக வேண்டும். ஆர்யா எனக்கு கேட்டதை விட அதிகமாக கொடுத்து விட்டார். படத்
தயாரிப்பாளராக இருக்கும்பொழுது ஆர்யாவுக்கும் எனக்கும் சண்டை வரும். ரொம்ப சலிப்பு ஏற்பட்டால் ஈஷா கிளம்பி சென்று விடுவேன். சத்குரு கிட்ட காசு வாங்கி தா என ஆர்யா கூறுவார்.



நான் காமெடியன் ஆகவும் நடிக்க வேண்டும் என சிம்பு எதிர்பார்க்கிறார். ஏற்கனவே நிறைய ஹீரோ படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது. நிறைய படங்களில் என்னை காமெடி வேடங்களில் மக்கள் பார்த்து விட்டனர். இனியும் காமெடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால், புதிதாக ஒரு ஸ்டைலில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நண்பன் சிம்புக்காக அவர் படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறேன். அதே போல் நண்பர் உதயநிதி என்னை அழைத்தால், எனக்கு சில விஷயங்கள் செட்டானால், அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன்"  என்று சந்தானம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

இதையும் படிங்க: சந்தனத்தால் தான் எல்லாமே.. அவர் கூப்பிட்டதால இந்த படத்தில்..! ஷாக் கொடுத்த சிம்பு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share