என்னாச்சு நடிகர் விஷாலுக்கு..? மேடையிலேயே திடீர் மயக்கம்.. அழகி போட்டியில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து பதறிப்போன அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மேடையில் இருந்து அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பின் சற்று உடல்நலம் தேறி தெளிவடைந்த நடிகர் விஷாலை முன்னாள் அமைச்சர் பொன்முடி உடனிருந்து மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். தற்போது நடிகர் விஷால் நலமுடன் இருப்பதாக அவரது தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சீக்கிரம் டும்..டும்.. பத்திரிக்கையுடன் உங்களை சந்திக்கிறேன்..! நடிகர் விஷால் சொன்ன மகிழ்ச்சி செய்தி..!
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மதகஜராஜா திரைப்பட பிரமோஷனில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர்.
அதன்பின் மீண்டும் ஃபார்முக்கு வந்த விஷாலை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் தற்போது அவர் மயங்கி விழுந்தது ரசிகர்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உங்கள் உடல்நலத்தின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள் என்று அவரது ரசிகர்கள் அன்பு கட்டளை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மகள் திருமணத்தில் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கணேஷ்!