×
 

நல்லபடியாக முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவின் க்ளிக்ஸ்..!!

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் இன்று (ஆகஸ்ட் 29) சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாகவும் ஆனால் மகிழ்ச்சியாகவும் நடந்து முடிந்தது. இவர்களின் காதல் கதை சில மாதங்களுக்கு முன்பு ‘யோகி டா’ பட விழாவில் அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

48 வயதாகும் விஷால், ‘செல்லமே’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்களால் புகழ் பெற்றார். 35 வயதாகும் சாய் தன்ஷிகா, ‘கபாலி’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையால் அறியப்பட்டார். இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடிந்த பிறகே திருமணம் செய்வேன் என விஷால் முன்பு கூறியிருந்தார். 

இதையும் படிங்க: மதகஜராஜா படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை..!

இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், திருமணத்திற்குப் பிறகும் சாய் தன்ஷிகா நடிப்பைத் தொடர வேண்டும் என விரும்புவதாக மேடையில் தெரிவித்திருந்தார். இந்த இணையத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 2019-ல் விஷாலின் முந்தைய நிச்சயதார்த்தம் நின்று போன நிலையில், இந்தப் புதிய தொடக்கம் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இதுதொடர்பாக நடிகர் விஷால், தனது எக்ஸ் தளப்பதிவில், என்னுடைய சிறப்புமிக்க பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்ததற்காக இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் அன்பான அனைவருக்கும் நன்றி.

சாய் தன்ஷிகாவுடன் இன்று நடந்த எனது நிச்சயதார்த்தம் பற்றிய நல்ல செய்தியை எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நேர்மறையாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்ல அதிர்வுகளையும் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாருக்கும் படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் ஹீரோவா..! பூஜையே போட்டாங்களே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share