×
 

Aditi Shankar: அழகு ராட்சசியே... அதிதி ஷங்கரின் அட்டகாச போட்டோ ஷூட்!

நடிகை அதிதி ஷங்கர், வெள்ளை நிற கியூட் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாரிசு நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
 

இவரின் திரையுலக என்ட்ரி யாரும் எதிர்பாராதது என்றாலும், இவரை ரசிகர்கள் வாழ்த்து கூறி வரவேற்றனர்.

முதல் படத்திலேயே கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை இயக்கும், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' படத்தில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: தங்கம் விக்கிற விலைக்கு இப்படியா? யாஷிகாவின் ட்ரெண்டிங் டிரஸ் போட்டோ ஷூட்!

இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்.

'விருமன்' பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடிக்க துவங்கினர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன், ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக 'நேசிப்பாயா', அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தொடர்ந்து, தெலுங்கிலும் பைரவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கருடன் படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிதி ஷங்கர் பைரவம் படத்தின் புரமோஷன் போது எடுக்கப்பட்ட புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கவர்ச்சி கோதாவில் குதித்த ரச்சிதா மகாலட்சுமி! இடையழகை காட்டவே இப்படி பட்ட போஸ்ஸா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share