#BREAKING காலையிலேயே பரபரப்பு... பிரபல நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...!
பாரதிராஜா மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜா மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அருணாவின் கணவர் மன்மோகன் குப்தா தொழிலதிபராக உள்ளார். இன்டீரியர் தொழில் செய்து வரும் இவர் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவலை அடுத்து 2 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மன்மோகன் குப்தா சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களுக்கு இந்த சோதனையானது நீடிக்கும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைக்குப் பிறகு நடிகை அருணாவின் வீட்டில் இருந்து என்னென்ன ஆவணங்கள், நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் அதிரடி கைது.. என்ன செய்தார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அருணா, 1980 இல் வெளியான பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார். சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் சிரிக்கிறது, மற்றும் ஷங்கருடன் கனலுக்கு கரையேது ஆகிய படங்களில் நடிகர் விஜயகாந்துடன் அடிக்கடி ஜோடியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வடிவேலு - பஹத் பாசில் காம்போவில் "மாரீசன்".. முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!