×
 

3 ஆண்டுகள் தலைமைறைவு.. மாடல் அழகி மீரா மிதுன் எங்க சிக்கியிருக்கார் பாருங்க..!!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

நடிகை மீரா மிதுன், தமிழ் சினிமாவில் தனது நடிப்பு மற்றும் சர்ச்சைகளால் பரவலாக அறியப்பட்டவர். சென்னையைச் சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா மற்றும் மிஸ் தமிழ்நாடு போட்டிகளில் வெற்றி பெற்று மாடலிங் துறையில் புகழ் பெற்றார். '8 தோட்டாக்கள்' (2017) மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' (2018) போன்ற படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். ஆனால், மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

2021 ஆகஸ்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர் தாழ்த்தப்பட்ட இயக்குநர்கள் மற்றும் பட்டியலின மக்களை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையும் படிங்க: எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? தேசிய தேர்வுக்குழுவை விளாசிய நடிகை ஊர்வசி..!!

மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 2022 ஆகஸ்ட் முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்தது.  

மேலும், 2022 ஏப்ரலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு ஆடியோ பதிவு வெளியிட்டதாக மற்றொரு வழக்கில் மீரா மிதுனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சமூக வலைதளப் பதிவுகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டது. இவர் 2019இல் காவல்துறையை இழிவாகப் பேசியதாகவும், ஹோட்டல் அதிகாரியை மிரட்டியதாகவும் வழக்குகள் பதிவாகின. திரிஷா, விஜய், சூர்யா போன்ற பிரபலங்களை அவதூறாகப் பேசியதாலும் ரசிகர்களிடையே சிக்கலில் மாட்டினார். 

இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தலைமறைவான மீரா மிதுனை கைது செய்ய காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து டெல்லி போலீசார் உதவியுடன், டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவால், தெருக்களில் சுற்றித்திரிந்த மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து டெல்லியில் உள்ள மீரா மிதுன் வரும் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 
 

இதையும் படிங்க: மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share