முகத்தில் புது பொலிவு... சிம்பிள் சேலையில் அழகு சிலையாக மாறிய சமந்தா!
நடிகை சமந்தாவின் ரீசென்ட் சாரீ போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. முன்னணி நடிகையாக இருக்கும் போதே... தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.
இவர்களின் திருமணம், கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், திரையுலகமே பார்த்து பொறாமை கொள்ளும் இளம் ஜோடியாக வலம் வந்தனர். திருமணத்திற்கு முன்பு தேர்வு செய்து நடித்த படங்களை விட, திருமணத்திற்கு பின்னர் மிகவும் போல்டான கதாபாத்திரங்களை சமந்தா தேர்வு செய்துநடித்தார் .
இதையும் படிங்க: நான் நிம்மதியாக தூங்க இவங்க தான் காரணம்..! நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!
நாக சைதன்யாவை விட, தெலுங்கில் சமந்தாவுக்கு தான் மார்க்கெட் அதிகம் இருந்தது. பல முன்னணி நடிகர்கள் இவருக்கு ஜோடியாக நடிக்க வரிசை கட்டிய நிலையில், இதுவே இவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசல் விழ காரணமாக அமைந்தது.
அதே போல் சமந்தாவின் உடல் நல பிரச்னையும், இவர்கள் இருவரும் பிரிய ஒரு காரணம் என அண்மையில் சூசகமாக ஒரு பேட்டியில் சமந்தாவே கூறி இருந்தார். விவாகரத்துக்கு பின்னர் தீவிர உடல்நல பிரச்சனைகளை சந்தித்த சமந்தா அதற்காக, அமேரிக்கா சென்று சிகிச்சையும் எடுத்து கொண்டார்.
மயோசிட்டிஸ் தீவிரத்தில் இருந்து மீண்டுள்ள சமந்தா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் சமந்தாவே சுபம் என்கிற படத்தை தற்போது தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை பெண் இயக்குனர் ஒருவர் இயக்கி உள்ளார்.
அதே போல் சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைகளும் எழுந்தது. இதற்க்கு சமந்தாவின் தரப்பில் இருந்து இது முற்றிலும் வதந்தி என கூறப்பட்டது.
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், தற்போது சமந்தா வெள்ளை நிற சிம்பிள் சேலையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மனசுக்குள் காதல் வந்துச்சா.. வந்தல்லோ.. வந்தல்லோ..! கிடைத்துவிட்டார் சமந்தாவின் புது காதலன்..!