தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!
தக் லைஃப் படத்தின் மூலமாக கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இருப்பவர் நடிகை சானியா மல்ஹோத்ரா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நிதீஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தங்கல்.
இந்த படத்தில் அமீர்கானின் இரண்டாவது மகள் பபிதா குமாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சானியா மல்ஹோத்ரா. முதல் படத்திலேயே திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதையும் படிங்க: தக் லைஃப் பட முத்தக்காட்சி சர்ச்சை..! அதிரடி பதிலால் ஆஃப் செய்த நடிகை அபிராமி..!
இதை தொடர்ந்து, ஹிந்தியில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். இவர் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு இவரை ஹீரோயினாகவும் மாற்றியது.
மேலும் இவரது கைவசம் மூன்று பாலிவுட் படங்கள் இருக்கும் நிலையில், தக் லைஃப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜிங்குச்சா பாடலில் மட்டுமே இவர் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் சிம்புவுடன் சானியா ஆடும் காட்சி அதிகம் பேசப்பட்டது.
எனவே கூடிய விரைவில் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சானியா, தற்போது கவர்ச்சிக்கு குறை வைக்காத மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தக் லைஃப் படத்திற்கு அமோக வரவேற்பு..! ப்ரீ புக்கிங்கில் சாதனை..!