×
 

Anna Serial: மறைக்கப்பட்ட உண்மை.. இசக்கியின் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், இசக்கி சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இசக்கி ஒரு பக்கம் அண்ணனை நினைத்து வருத்தத்தில் இருக்க இன்னொரு பக்கம் சண்முகம் தங்கச்சிக்கு எல்லாம் பாதியில போக போறவங்க தானே என வருத்தப்பட்டு பேசுகிறான்.  சண்முகம் தன்னுடைய தங்கையின் குழந்தை உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவள் உன்னுடன் இருந்தால் பாதுகாப்பாக இருப்பாள் என தனது பக்க நியாயத்தை சொல்கிறான். 

இன்னொரு பக்கம் பிளாஷ்பேக்கில் முத்துப்பாண்டி மற்றும் பாக்கியம் அழுது கொண்டிருக்க அப்போது இசக்கி என்னாச்சு என்று கேட்கிறாள். முத்துப்பாண்டி அம்மா தலை வலிக்குது என்று சொல்லிக்கிட்டே இருந்ததால் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பரிசோதனை செய்த போது அவங்களுக்கு கேன்சர் இருப்பதாக சொல்லிட்டாங்க என்று சொல்ல இசக்கி அதிர்ச்சி அடைகிறாள். 

அம்மாவை நாமதான் கூட இருந்து பாத்துக்கணும் நீ வீட்டுக்கு வரியா என்று கேட்க அத்தைக்காக இசக்கி இப்படி ஒரு முடிவு எடுத்த விஷயம் தெரிய வருகிறது. சௌந்தர பாண்டி கூப்பிட்டதும் இசக்கி கிளம்பி வந்து விட்டதால் அவருக்குள் ஒரு சின்ன சந்தேகமும் கிளம்ப தொடங்குகிறது. 

இதையும் படிங்க: Anna Serial: சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி சென்ற இசக்கி; காரணம் என்ன?

பரணிக்கு உண்மை தெரிந்தால் அவர் அமெரிக்கா போக மாட்டா என்ற காரணத்தினால் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: Anna serial: சண்முகத்தின் சபதம்... ஆச்சர்யத்தில் உறைந்த பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share