×
 

நயன்-க்கு வந்த அடுத்த தலைவலி.. ஆவணப்பட வழக்கில் மேலும் ஒரு சிக்கல்..!

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷுக்கும் என்ன தான் ஆனது என்று சொல்லும் அளவிற்கு இருவரும் தற்பொழுது நீதிமன்றம் வாயிலாகவும் அறிக்கையின் வாயிலாகவும் சண்டையிட்டு வருகின்றனர். இப்போது இப்படி மாறி...மாறி... சண்டையிட்டு கொள்கிறவர்கள் ஒருகாலத்தில் இப்படி இல்லையே என நெட்டிசன்கள் புலம்பும் அளவிற்கு இந்த காபி ரைட்ஸ் விஷயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவும் தனுஷும் கேரக்ட்டராக வாழ்ந்தனர். மேலும் தனுஷின் த்ரீ படத்தில் அவருடன் சிறப்பு நடனமும் ஆடி இருப்பார் நயன்தாரா. 

இப்படி எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்க, நயன்தாராவின் திருமணத்தால் தனுஷ் பாதிக்கப்பட்டாரா அல்லது அவரது படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் காண்பித்ததால் கோபப்பட்டாரா என புரியாமல் இன்றும் ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டு செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கேஸின் தாக்கம் மக்களிடத்தில் உள்ளது. ஒருபுறம் தனுஷும் விட்டு கொடுப்பதாக இல்லை, மறுபுறம் நயன்தாராவும் விட்டு கொடுப்பதாக இல்லை என்று தெளிவாக தெரிகிறது. 

இதையும் படிங்க: இப்படி ஒரு சர்ப்ரைஸ எதிர்பார்க்கலைல.. நயன் - விக்கி தம்பதி யாருடன் திருமண நாளை கொண்டாடி இருக்காங்க பாருங்க..!

இப்படி இருக்க, இந்த பிரச்சனை ஆரம்பித்த இடம் எங்கு என்று பார்த்தால், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்தில் தான். இவர்களது திருமண வீடியோவை நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் "பியாண்ட் தி ஃபேரி டேல்"(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே, அதில் "நானும் ரவுடி தான்" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டார். மேலும் நயன்தாராவின் திருமண ஆவணப் படத்தை வெளியிட கூடாது எனவும் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.  

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா, அறிக்கை வாயிலாக நடிகர் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அது பத்தாது என அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் கண்டு ரசியுங்கள் என தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்க பிரச்சனை பூதாகரமானது. ஆரம்பத்தில் தொழில் ரீதியாக இருந்த கருத்து வேறுபாடு, இந்த பதிவுக்கு பின் 'ஈகோவாக' மாறி, தற்பொழுது இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர். இவர்கள் இருவரின் ஈகோ சண்டையில் இலவச இணைப்பாக சிக்கியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் சில மாதங்களுக்கு முன்னர் நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியானது. இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க: ராய் லட்சுமி நடத்திய கலக்கல் போட்டோ ஷூட்..! இணையத்தில் உலா வரும் நச் கிளிக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share