ரேஸுக்கு நாங்க ரெடி..!! புதிய ரேஸ் காரை அறிமுகம் செய்து வைத்தார் "AK"..!!
ஆசிய கார் ரேஸ் தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை அஜித்குமார் அறிமுகம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தனது ரேசிங் பயணத்தில் மீண்டும் ஒரு மைல்கல் எழுச்சியை பதிவு செய்துள்ளார். ஆசிய லெ மான்ஸ் சீரிஸ் (Asian Le Mans Series) தொடரில் பங்கேற்கும் அவரது அஜித்குமார் ரேசிங் அணிக்காக, புதிய ரேஸ் காரை அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுகம், இந்திய ரேசிங் உலகில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார், 1990களில் இருந்து ரேசிங் உலகில் ஈடுபட்டு வருகிறார். இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பில் தொடங்கி, ஃபார்முலா BMW ஆசியா சாம்பியன்ஷிப், FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் வரை அவரது பயணம் சிறப்பானது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஜனவரியில் நடைபெற்ற 24H துபாய் ரேஸில் அவரது அணி போர்ஷ் 992 GT3 கப் வகையில் மூன்றாம் இடத்தை தக்கவைத்தது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் இத்தாலியின் முகெல்லோவில் நடைபெற்ற 12H ரேஸிலும், ஜூலை மாதம் பெல்ஜியத்தின் ஸ்பா-ஃபிரான்சோர்சாம்ப்ஸ் சுற்றில் நடைபெற்ற க்ரெவென்டிக் எண்ட்யூரன்ஸ் ரேஸிலும் மூன்றாம் இடங்களை பெற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டம் வெறித்தனமா இருக்கப்போகுது..! ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கு தயாரான AK..!
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி சமீபத்தில் அறிவித்தது. அதாவது, அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார். இந்நிலையில், இந்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை ‘அஜித்குமார் ரேஸிங்’ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த அறிமுகம், இந்தியாவின் ரேசிங் கலாச்சாரத்தை உலக அளவில் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அஜித், சினிமாவிலும் கலக்கி வரும் நிலையில், ரேசிங் மீதான அவரது அன்பு மற்றும் ஈடுபாடு அசைக்க முடியாதது. ஆசிய லெ மான்ஸ் சீரிஸ் தொடர், அஜிதின் புதிய காரின் செயல்திறனை சோதித்து பார்க்கும் மேடையாக அமையும். இந்திய ரேசிங் ரசிகர்கள், இந்த சீரிஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தளபதியை தொடர்ந்து மிரட்டும் 'தல'... ஸ்பெயின் கார் ரேஸில் அஜித்குமார்...! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!