×
 

#BREAKING கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி... பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்...!

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரான ஏ.வி.எம். சரவணன் தனது 85 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்தியாவின் பழம்பெறும் திரைப்பட ஸ்டுடியோவான ஏவிஎம் புரொடக்ஷன்ஸின்  உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நல பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த ஏ.வி.எம். சரவணன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1946 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டுடியோவை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மகன் ஆவார்.  ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்குப் பிறகு, ஏ.வி.எம். சரவணன்  தயாரிப்பு நிறுவனத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார். 

அவரது தலைமையின் கீழ், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தமிழ் மற்றும் பிற மொழிகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பல்வேறு படங்களை வழங்கியுள்ளது. 'நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ , ‘மின்சார கனவு’ என கிளாசிக் வெற்றிகளில் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்‘சிவாஜி’, விஜயின் ‘வேட்டைக்காரன்’, சூரியாவின் ‘அயன்’ உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். 

ஏவிஎம் ஸ்டுடியோஸ், தொழில்துறையில் எண்ணற்ற சூப்பர் ஸ்டார்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கியுள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தனது தந்தையால் நிறுவப்பட்ட ஸ்டுடியோவின் மரபு மற்றும் நெறிமுறைகளை அவரது வழியிலேயே பழமை மாறாமலும், அதே சமயம் புதுமைக்கு ஏற்றபடியும் வழி நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளை ஏ.வி.எம்.சரவணன் மகன் எம்.எஸ்.குகன் நிர்வகித்து வருகிறார். 

ஏ.வி.எம். சரவணன் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர். தமிழக அரசின்  “கலைமாமணி”, புதுவை அரசின் “பண்பின் சிகரம்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். 

ஏ.வி.எம்.சரவணனின் உடல் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்காக சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்த ஏ.வி.எம்.சரவணனின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share