×
 

COMEBACK கொடுத்த BTS!! 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ஷோ! 1.04 லட்சம் ரசிகர்கள் ஆரவாரம்! BTS ARMYயின் கனவு நனவானது!

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிஎஸ் இசைக்குழு மீண்டும் மேடையேறினர். 1,04,000 ரசிகர்கள் திரண்டு உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் புகழ்பெற்ற கே-பாப் இசைக்குழு BTS மீண்டும் முழு அமைப்பாக மேடையேறி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குவாங்ஹ்வாமுன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட வரவேற்பு இசை நிகழ்ச்சியில் சுமார் 1,04,000 ரசிகர்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். 

கொரியாவில் 18 முதல் 28 வயதுக்குள் உள்ள ஆண்கள் குறைந்தது 18 முதல் 21 மாதங்கள் ராணுவப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயம். இதனால் BTS உறுப்பினர்களான RM, ஜின், சுகா, ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் ஒவ்வொருவராக ராணுவத்தில் சேர்ந்து தங்கள் கடமையை நிறைவேற்றினர்.

2022-ல் ஜின் முதலில் ராணுவத்தில் இணைந்தார். கடைசியாக சுகா 2025 ஜூனில் பணியை முடித்தார். இதனால் குழு முழுவதும் சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒன்றாக இணைந்துள்ளது.

இதையும் படிங்க: ரம்ஜான் கொண்டாட்டத்தில் மணிமேகலை..! அதிரடியாக வெளியிட்ட கியூட் போட்டோஷூட் வைரல்..!

BTS-ன் ரசிகர்கள் BTS ARMY என்ற பெயரில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உள்ளனர். அவர்களின் அன்பும் ஆதரவும் தான் இந்த குழுவை உலக அளவில் மிகப் பெரிய இசை அமைப்பாக உயர்த்தியது.

2013-ம் ஆண்டு 2 COOL 4 SKOOL என்ற தலைப்பில் அவர்களின் முதல் இசை ஆல்பம் வெளியானது. அப்போது சிறிய அளவில் தொடங்கிய பயணம் இன்று உலகையே கவரும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

சமீபத்தில் புதிய ஆல்பம் Arirang வெளியானதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற இந்த இலவச கான்சர்ட் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் நேரலை ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் பல மணி நேரம் முன்பே சதுக்கத்தை நிரப்பினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமளவில் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி BTS-ன் புதிய உலக சுற்றுப்பயணத்தின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ARMY-யுடன் மீண்டும் இணைந்த BTS உறுப்பினர்கள் மிகுந்த உணர்ச்சியுடன் பாடல்களை வழங்கினர். ரசிகர்களின் கைதட்டல், குரல்கள் மற்றும் ஒளி காட்சிகள் சியோலை முழுவதும் அதிர வைத்தன.

இந்த கம்பேக் உலக இசை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. BTS-ன் திரும்ப வருகை இசை உலகத்திற்கு புதிய ஆற்றலை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: பிரபுதேவா மகன் நடிப்பில் ‘முதன் முதலாய்’ ஆல்பம் வைரல்..! இசையமைப்பாளராக மாறிய ரவிச்சந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share