நாளை வெளியாகும் படம் ஹிட் கொடுக்கனும்..! கோவிலில் தஞ்சம் புகுந்த 3BHK படகுழுவினர்..!
படம் வெற்றியடைய வேண்டும் என 3BHK படகுழுவினர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சினிமாக்களில் தற்பொழுது பெரும்பாலும் காண்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், சைக்கோ கில்லர் என அனைத்து காரியங்களையும் மக்களுக்கு தாமாகவே முன்வந்து சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு சினிமா இப்பொழுது மாறி இருக்கிறது. அவர்னஸ் என்ற பெயரில் சினிமா துறையினரே இப்படி படங்களை எடுப்பதால் தற்பொழுது பெற்றோர்கள் இந்த அவலத்தை யாரிடம் சொல்லி அழுவது என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்க தயவு செய்து உங்கள் ஆக்சன் திரைப்படங்களை கொஞ்ச நாளைக்கு குறைத்து விட்டு குடும்பம் என்றால் என்ன? பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் என்ன? பெண்மை என்றால் என்ன? பிள்ளைகளின் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும்? வாழ்க்கையில் சுயமரியாதையோடு வாழ்வது எப்படி? உண்மையான காதல் என்றால் என்ன? காதல் செய்து திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது? அன்பு எப்படி இருக்க வேண்டும்? பிறரையும் நேசிக்கும் பண்பு எப்படி உருவாகிறது? வேலைக்கு செல்வதால் என்ன பயன்? என்றெல்லாம் திரைப்படங்கள் எடுத்திருந்தால் இன்று வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும் போல வேலைக்கு சென்றால்தான் நமக்கு மரியாதை இருக்கும் போல என்பது எல்லாம் கற்று இருப்பர்கள்.
இதையும் படிங்க: 3BHK என்ன மாதிரி படம் தெரியுமா... கண் கலங்கிய நடிகர் சிம்பு..!
ஆனால் இப்பொழுது ஹேர் ஸ்டைல்கள் ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, வாத்தியார்களை அடிப்பதைப் போன்ற காட்சிகளையும் சினிமாக்களில் வைத்து பெண்களை கற்பழிக்கிறார்கள் அதை தடுப்பது எப்படி? என காண்பிக்கிறார்கள் சரி அதையாவது ஒழுங்காக காண்பிக்கின்றனரா என்று பார்த்தால் கற்பழிக்கும் காட்சிகளை ரியாலிட்டி காட்சிகளைப் போல காண்பித்து இளசுகளும் அதை செய்ய தூண்டும் அளவிற்கு மாறி இருக்கிறது இன்றைய சினிமா. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்களுக்கு ஏற்றபடி மாறினால் நன்றாக இருக்கும் எனவும், தயவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி நீங்களே இளசுகளுக்கு கற்றுக் கொடுப்பதை போன்ற படங்களை கொஞ்ச நாளைக்கு தடுத்து போடுங்கள் என பெரியவர்கள் அனைவரும் தங்களது ஆதங்கங்களை குமுறி தீர்த்து வருகின்றனர்.
உதாரணமாக சமீபத்தில் வெளியான "ஃபயர்" திரைப்படத்தில் மருத்துவர் எப்படி பெண்களை உபயோகிக்கிறார்? என்று காண்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபாசத்தின் உச்சத்தை இவர்களே காண்பித்து இருக்கின்றனர். இப்படி இருக்க ஒரு காலத்தில் குடும்பங்களே இப்படித்தான் இருக்கிறது என்பதை காட்டி, சுதந்திரம் பெரும் அளவிற்கு மக்களின் எண்ணத்தையும் நாகரிகத்தையும் மாற்றிய சினிமா இன்று பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இப்படிப்பட்ட தான வேலையில் தற்பொழுது வெளியாகி வரும் குடும்பஸ்தன், மாமன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப கஷ்டங்களை உலகிற்கு எடுத்து சொல்லும் அற்புதமான திரைப்படமாக வெளியாக இருக்கிறது 3BHK திரைப்படம்.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்க்கையில் வீடு என்பதை எவ்வளவு முக்கியமாக கருதுகின்றனர் என்றும் தங்களால் வாங்க முடியாத வீடு என்ற விஷயத்தை தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக் கொடுத்து அவர்களை முதலீடாக வைத்து வீட்டை வாங்கும் கனவு நிறைந்த பல குடும்பங்களின் உண்மை கதைகளை திரையில் கண்டால் எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் "3bhk" படக்குழுவினர். வந்த வகையில், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்த "3BHK".
ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ள "3BHK" திரைப்படமானது வெற்றி பெற வேண்டும் என சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சரத்குமார், நடிகை தேவயானி, சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார், " நாம் ஒரு முயற்சி எடுக்கும்போது அந்த முயற்சி நமக்கு வெற்றிக்கரமாக இருக்கனும் என்று சொல்லி கடவுளிடம் வேண்டுவது வழக்கம். அதே போல் தான் வாசுதேவன் குடும்பத்திற்கும் வெற்றி வரணும். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வெற்றி கிடைக்கணும். இதுவரை படத்தை பார்த்தவர்கள் அளித்துள்ள விமர்சனம் முழுவதும் பாசிட்டிவாகவே உள்ளது.
இருப்பினும் உழைப்புக்கு வெற்றி கிடைக்கணும். நாங்கள் உழைத்துள்ளோம் பிரதிபலன் மக்களிடம் தான் தெரியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்களில் கண்ணீர் வரவைத்த "3BHK" பட ட்ரெய்லர்..! பலரின் கனவை அப்படியே காண்பித்த இயக்குநர்..!