வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வர தான் செய்யும்..! இயக்குநர் மோகன் ஜி பகிரங்க குற்றச்சாட்டு..!
இயக்குநர் மோகன் ஜி, வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வர தான் செய்யும் என பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படம் தொடக்கத்திலிருந்தே விவாதங்களுக்குப் பஞ்சமில்லாத படமாகவே இருந்து வருகிறது. முதல் பாகமான "திரௌபதி" வெளியான தருணத்திலிருந்து சமூக-அரசியல் நோக்கில் பல்வேறு விமர்சனங்களும் ஆதரவுகளும் எழுந்தது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமும் சமூக வலைத்தளங்களிலும் திரைப்பட வட்டாரங்களிலும் பெரும் அரசியல் நிழல் சூழ நடந்து வருகிறது.
சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'எம்கோனே' பாடல் வெளியாகி, அதனை பிரபல பாடகி சின்மயி பாடியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு குரல் எழுந்தது. சின்மயி இந்த பாடலைப் பாடியிருக்கக் கூடாது என்ற குற்றச்சாட்டுகள் சிலரிடத்தில் எழ, அவர் மீது தேவையற்ற தாக்குதல்களும் நடந்தன. இப்படி இருக்க சின்மயி தனது சமூக வலைதளப் பதிவில், “படத்தின் பின்னணியும் இயக்குநரின் சித்தாந்தமும் பற்றி எனக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் பாடிய பாடலின் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து வருந்துகிறேன். தவறுதலாக நடந்த விஷயமென மன்னிப்பு கேட்கிறேன்,” என பதிவு செய்ததும், அது இணையத்தில் வெடித்து பரவியது.
இதனால், சின்மயி ரசிகர்கள் அவரை ஆதரித்து, அவருக்கு எதிராக தாக்குதல் நடத்துவோரைக் கண்டித்து பதிவுகள் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், மோகன் ஜியின் ஆதரவாளர்கள், “சின்மயி பணம் வாங்கி பாடி விட்ட பிறகு மன்னிப்பு கேட்பது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினர். இது இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் விவாதத்தையும், கருத்து மோதலையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளத்தில் மேலும் தீவிர விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. அவர் பேசுகையில், “இப்போ தான் படத்தோட முதல் பாடல் வெளியாகுது. அதை வெளியிட்ட உடனே படத்தை காலி பண்ணணும் என்று பெரிய கூட்டமே இறங்கி வேலைய செய்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்த உண்மைய சின்மயி வாயாலேயே சொன்னா நல்லா இருக்கும். நான் சொன்னா அது குற்றச்சாட்டு ஆகிடும். வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வரும். அதெல்லாம் சமாளிச்சா தான் இந்த மோகன் ஜி மாதிரி நிக்க முடியும்.” என்றார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் விஜய் மற்றும் தனுஷ்..! 'ஜனநாயகன்' Audio Launch-ல காத்தருக்கும் சர்ப்ரைஸ்..!
சின்மயி தான் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றும், படத்தைத் தாக்க ஒரு கூட்டமைப்பு திட்டமிட்டு செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். சின்மயிக்கு ஆதரவாக உள்ளவர்கள், சின்மயி பாடலைப் பாடியதாகவே தவறு செய்யவில்லை, பாடல் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை ஒரு பாடகி முன்கூட்டியே அறிய முடியாது, அவர்மீது நடக்கும் தாக்குதல்கள் தேவையற்றவை மற்றும் பாலின முனைப்போடு இருக்கும் என்று வாதிக்கின்றனர். அதேசமயம் மோகன் ஜி ஆதரவாளர்கள், ‘திரௌபதி’ வகை படங்கள் எதிர்பாராத விமர்சனத்துக்கு ஆளாகிறது. சின்மயியின் மன்னிப்பு தேவையற்ற பட்டினத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வெளியான உடனே பெரிய அளவிலான திட்டமிட்ட தாக்குதல் நடந்தது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
சில பிரபல பாடகர்கள், “ஒரு பாடலைப் பாடினார் என்பதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது” என சின்மயியை ஆதரிக்க, சில இயக்குநர்கள் “படம் சர்ச்சைக்குரியதாக இருந்தால் பாடகர்கள் முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டும்” என்றும் முன்வைத்துள்ளனர். இந்த ஒரே பாடல் வெளியிடப்பட்டதற்குள் இப்படம் குறித்து உருவான சர்ச்சைகள், படத்தின் வெளியீட்டு தருணத்தில் என்னென்ன விவாதங்கள் உருவாகப் போகின்றன என்பதை ரசிகர்கள் கணக்கிட ஆரம்பித்து விட்டனர். ஒரு புறம் படம் எந்த அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கிறது என்ற கேள்வியும், மறுபுறம் பாடகர்களின் தேர்வு, இயக்குநரின் கருத்துக்கள், ரசிகர்களின் எதிர்வினைகள் என ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் பெரும் விஷயமாக மாறி வருகிறது.
இப்படத்தின் உருவாக்கம் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனம் எழுந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில், இப்படத்திற்கு பெரும் ஆதரவையும் கொண்டிருக்கும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் பார்வையில், “திரௌபதி 2 எந்த சவாலுக்கும் பயப்படாமல் வெளிவந்துவிட வேண்டும்” என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆகவே 'எம்கோனே' பாடலைச் சுற்றி உருவான இந்த சர்ச்சை இன்னும் ஓரிரு நாட்களில் அடங்கும் என சொல்ல முடியாது. சின்மயியின் மன்னிப்பு, மோகன் ஜியின் பதில்,
ரசிகர்கள் இருபாலாகப் பிரிந்து வாதிப்பது – அனைத்தும் சேர்ந்து திரௌபதி 2 படத்தை வெளியீட்டுக்கு முன்பே தேசிய அளவிலான விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. இப்படம் வெளிவரும் தருணத்தில் இன்னும் எத்தனை பரபரப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியானது ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில்..! கொண்டாட்டத்தில் GV Fan's..!