படம் சூப்பரா இருக்கும் போலயே..! கோடிகளை கொடுத்து "ஆண்பாவம் பொல்லாதது" படத்தின் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வெளியீட்டு உரிமையை பல கோடிகளை கொடுத்து பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் பயணத்தைத் துவங்கி, தற்போது முழு நேர நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு, அவரது நகைச்சுவை செம்மையான 'டைமிங்' மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ரியோ, கடந்த சில ஆண்டுகளில் சில முக்கியமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படமான "ஆண்பாவம் பொல்லாதது", தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சமூக கருத்துள்ள படமாக வெளிவரவிருக்கிறது. இப்படி இருக்க ரியோ ராஜ், 'விஜய் டிவி'யில் காமெடி நைட் வித் ரியோ, கூகுள் குட்டப்பா, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றி, இளைஞர்களிடையே பிரபலமானார். 2019-ம் ஆண்டில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின், 'பிளான் பண்ணி பண்ணனும்', 'ஜோ', 'ஸ்வீட் ஹார்ட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய 'ஜோ' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த வெற்றி கண்டது. இப்படத்தில் அவருடன் நடித்த மாளவிகா மனோஜ் மீண்டும், 'ஆண்பாவம் பொல்லாதது' படத்திலும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி மீண்டும் இணைய்வது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக 'ஆண்பாவம் பொல்லாதது' என்ற தலைப்பே, படம் ஒரு புனைவு அல்ல, சமூகத்தில் நடக்கும் உண்மைகளை ஒளிப்படமாக சொல்லும் ஒன்று என்பதை உணர்த்துகிறது. இந்த படத்தின் முக்கிய நோக்கம் – ஆண்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் அழுத்தங்கள், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள், சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவை. இப்போதைய சமூக சூழலில், “ஆண்” என்பது ஒரு வலிமையான உருவாக்கமாக மட்டும் பார்க்கப்படுவதால், அவர்களின் மன வேதனைகள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை.
இதையும் படிங்க: வெற்றிகரமாக ஓடும் கவின் நடித்த 'கிஸ்'..! படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!
இவ்விளைவாக, ஆண்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் படம் கவனத்தில் கொண்டு விரிவாக ஆராய்கிறது. இந்தப் படத்தின் தமிழ்நாட்டில் திரையரங்க வெளியீட்டு உரிமையை, தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவங்களில் ஒன்றான AGS என்டர்டைன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது மிக முக்கியமான முடிவாகக் கருதப்படுகிறது. ஏனெனில், AGS நிறுவனம் வெளியிட்ட பல படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிறுவனத்தின் வெளியீடு படம் மீது இருக்கும் நம்பிக்கையையும், பெரிய ரிலீஸ் ப்ளானையும் காட்டுகிறது.
இதனால், ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. ரியோ ராஜ் தனது பல படங்களில் பச்சை நகைச்சுவையும், மனித உணர்ச்சியும் நன்கு வெளிப்படுத்தியவர். அத்துடன் மாளவிகா மனோஜ், ‘ஜோ’ படத்தின் வாயிலாக இளம் ரசிகர்களிடம் ஈர்ப்பு ஏற்படுத்தியவர். இந்த கூட்டணி மீண்டும் இணைய, ரசிகர்கள் இந்த படத்தில் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு சமூக பார்வையை எதிர்பார்க்கின்றனர். இப்படம் கலையரசன் தங்கவேல் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இவர் முந்தைய காலங்களில் முக்கிய இயக்குநர்களின் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அவர் கூறுகையில், “ஆண்கள் பற்றிய உண்மையான வாழ்க்கையை ஒளிப்படமாகக் கொண்டு வர விரும்பினேன். இது ஒரு தீர்ப்பு வழங்கும் படம் அல்ல, கேள்விகளை எழுப்பும் படம்” என்றார். ஆகவே 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படம், தமிழ் சினிமாவில் சாதாரணமாக பேசப்படாத ஒரு முக்கியமான சமூகக் கருவை, உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையுடனும் சொல்லும் முயற்சி.
இது வெறும் கமர்ஷியல் மசாலா படம் அல்ல. இது ஒரு சமூகக் கருத்துள்ள படம். ரியோ ராஜ் இதன் மூலம் தனது நடிகராகும் பயணத்தில் ஒரு புதிய உயரத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படம், இளம் ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்ப பார்வையாளர்களையும் பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசியாவிலேயே நாம தான் கிங்...! அஜித் கார் ரேஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட்..!