காஷ்மீர் தாக்குதல் எதிரொலி.. இந்த படம் வெளியானால் அவ்வளவுதான்.. வெடிக்கும் போராட்டம்..!
காஷ்மீர் தாக்குதலுக்கு பின் வெளியாக உள்ள படத்துக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு கோஷம்.
காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பினர் பொறுப்பேற்று இருக்கிறது.
மேலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: கங்கை அமரன் பேச்சுக்கு பிரேம்ஜி பதிலடி..! அஜித்துக்காக சொந்த அப்பாவையே எதிர்த்த தீவிர ரசிகன்..!
இப்படி இருக்க, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் சூர்யா தனது கண்டனத்தை தெரிவித்தார். அதன்படி, "பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும்" என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி " பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது" என தெரிவித்தார்.
மேலும், நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். என கூறியுள்ளார்.
இப்படி சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஒரு குறிப்பிட்ட படத்தினை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற குரல் நாடெங்கும் வலுத்து வருகிறது. அந்த வகையில், ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மக்கள் கூறி வருகின்றனர்.
இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாமல் எடுக்கப்பட்ட இந்த படம் இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் வருகின்ற மே 9ம் தேதி வெளியாகும் இப்படத்தை வெளியிட கூடாது என கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!