×
 

இரும்பு கம்பியால் ஒரே அடி... படுகொலை செய்யப்பட்டார் நடிகர் பாபு சேத்ரி..!

பாலிவுட் நடிகர் பாபு சேத்ரி, இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரம், சினிமா ரசிகர்களுக்கும், விளையாட்டை நேசிப்பவர்களுக்கும் ஒரு சோகச் செய்தியை அளித்துள்ளது. “ஜுண்ட்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த இளம் நடிகர் பாபு சேத்ரி (வயது 21) மரணமடைந்துள்ளார். ஆனால், இது சாதாரண மரணம் அல்ல.. அதிர்ச்சிகரமான கொலை. இந்தச் சம்பவம் நாக்பூர் போலீசையும், திரைப்பட உலகையும் திடுக்கிட்டுக் கொண்டுள்ளது.

இப்படி இருக்க பாபு சேத்ரி என்ற பெயர் இந்திய சினிமாவிற்கு புதிதல்ல. அவர் 2022ல் வெளியான “ஜுண்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் “ஸ்லம் சாக்கர்” என்ற சமூக இயக்கத்தின் நிறுவனர் விஜய் பார்சி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே, “சாய்ராட்” படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்றவர். அவரது இயக்கத்தில் நடித்திருந்த பாபு சேத்ரி, ஒரு குடிசைப்பகுதி இளைஞராக வலிமையான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே தனி இடம் பெற்றார். அவரது நடிப்பு இயல்பானது, உண்மைச் சிற்பம் போல இருந்தது. இந்த திரைப்படத்தில் போலவே, உண்மையிலும் அவர் நாக்பூர் நகரில் உள்ள லும்பினி நகர் பகுதியில் வசித்து வந்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன், சினிமாவைத் தன் தொழிலாக மாற்றியிருந்தார்.

இப்படி இருக்க “ஜுண்ட்” படம் ஒரு ஆசிரியர் குடிசைப்பகுதி குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றும் கதையாகும். அந்தக் கதையின் ஒரு முக்கிய பங்கு தான் பாபு சேத்ரி நடித்த பாபு என்ற கதாபாத்திரம். அவர் நடித்த இயல்பான நடிப்பு, புனேயிலும், மும்பையிலும் பாராட்டைப் பெற்றது. சினிமா விமர்சகர்கள், “இவர் எதிர்காலத்தில் பெரிய நடிகராக உருவெடுப்பார்” என்று குறிப்பிட்டனர். ஆனால், அந்த எதிர்காலம் இப்போது முடிந்துவிட்டது... அது ஒரு துயரமான முடிவாகவே இருக்கிறது. நேற்று அதிகாலை, ஜரிபட்கா என்ற பகுதியில், ஒரு கைவிடப்பட்ட வீட்டின் அருகில் அரை நிர்வாண நிலையில் ஒரு இளைஞர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு, முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு காயம் இருந்தது.

இதையும் படிங்க: என்னது இது.. புதுசா இருக்கே..! முதன்முதலில் பேண்டஸி படத்தில் நடிகைகள் யாமி கவுதம் - கீர்த்தி சனோன்..!

உள்ளூர் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இளைஞரை உடனே மேயோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர். மரணம் இயல்பானதல்ல என்பதை உணர்ந்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். போலீசார் முதலில் இறந்தவரை அடையாளம் காண முயன்றனர். அவர்தான் “ஜுண்ட்” பட நடிகர் பாபு சேத்ரி என்று உறுதிசெய்யப்பட்டது. விசாரணையில், பாபுவின் நெருங்கிய நண்பர் துருவ் லால் பகதூர் சாகு (வயது 20) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் ஜரிபட்கா பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, இருவரும் தள்ளுமுள்ளாகியுள்ளனர். அப்போது சாகு, அருகிலிருந்த இரும்பு கம்பியைப் பயன்படுத்தி பாபுவை தாக்கியுள்ளார். அதன்பின் பாபுவை பிளாஸ்டிக் வயர்களால் கட்டி, அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை குறித்து போலீசார் கூறுகையில், “பாபு சேத்ரியின் உடலில் தாக்குதலின் பல சுவடுகள் இருந்தன. அவரது தலையில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம்.” என்றார். சாகுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபு சேத்ரி மற்றும் சாகு இருவரும் முன்னர் சிறிய அளவிலான திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த வழக்குகள் தற்போது நிலுவையில் இருந்தன. இதனை குறித்து போலீசார் தற்போது இரண்டு கோணங்களில் விசாரிக்கின்றனர் – ஒன்று வாக்குவாதம் மதுபோதைய கோபத்தால் ஏற்பட்டதா? இரண்டாவது  இதற்குப் பின்னால் வேறு எந்தத் தனிப்பட்ட பழிவாங்கலும் உள்ளதா? இந்தச் சம்பவம் சினிமா உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே “ஜுண்ட்” படத்தின் மையக் கருத்து – “விளையாட்டு வாழ்க்கையை மாற்றும்” என்பது தான். ஆனால் உண்மை வாழ்க்கையில், பாபு சேத்ரியின் வாழ்க்கை மாறியது தவறான நட்பு, மதுபோதை முடிவுகள் காரணமாக. இந்த சம்பவம் தற்பொழுது பலருக்கும் பாடமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஒருகாலத்தில் பிரபல காஸ்டியூம் டிசைனர்.. இன்று இயக்குநர்..! inspiration - ஆக மாறிய நீரஜா கோனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share