திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் சூர்யா குடும்பத்தினர் சென்றுள்ளனர் .
ஒரு காலத்தில் நடிப்பிற்காக இணைந்த ஜோடிகள் வரிசையில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் என்றால் அதுதான் சூர்யா ஜோதிகா தம்பதி. பெரியவர்கள் கூறியது போல அழகான மனைவி, அன்பான கணவன், அருமையான பிள்ளைகள் இருந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என சொன்னதைப் போல இன்று இவர்களது வாழ்க்கையும் அவ்வாறாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட இவர்களது வாழ்க்கை பலரும் பொறாமை படும் வகையில் அமைந்து இருக்கிறது. நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதிலிருந்து இவர்களது காதல் வாழ்க்கை தோன்றியது.
அதன் பின், 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இருவரும் பெற்றவர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சில நாட்கள் சினிமாவிற்குள் வராத ஜோதிகா தனது குழந்தைகள் மற்றும் குடும்ப நலனில் அக்கறை காட்டி வந்தார். இப்படி பட்ட ஜோதிகாவின் நலனிலும் அவரது கெரியரிலும் அக்கறையில் உள்ள சூர்யா சமீபத்தில் தனது மனைவியான ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவருடனும் மும்பையில் உள்ள ஜோவின் அம்மாவீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த சூழலில், கடைசிப் பல ஆண்டுகளாக சென்னை – மும்பை என இரண்டு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை போல் வலம் வந்துகொண்டு இருக்கின்றனர் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இப்படி இருக்க தற்போது சூர்யா, தனது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தை முடித்துவிட்டு, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதன் மூலம் சூர்யா புதிய முறையில் இயக்குநர்களுடன் இணைந்து நடிப்பை தாண்டும் பங்களிப்பை அளித்து வருகிறார். திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகி பாபு என பல்வேறு முக்கியக் கதாபாத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் இந்த படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக, அரசியல் மற்றும் மனித மனதின் இருண்ட கோணங்களை ஆராயும் வகையில் 'கருப்பு' திரைப்படம் இருக்கும் என படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆர்ஜே பாலாஜியின் இயக்கத் திறனும், சூர்யாவின் தடம் பதிக்கும் நடிப்பும், இந்தப் படத்தை தனிச்சிறப்பாக மாறச் செய்யும். இப்படி இருக்க ‘கருப்பு’ படத்திற்குப் பின், சூர்யா தனது 46வது திரைப்படத்தில் வேகமாக நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இது சூர்யாவின் தெலுங்கு திரையுலகிற்கும் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பாக அமைவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.
இதையும் படிங்க: நான் எந்த ட்ரெஸ் போட்டா உனக்கென்னா..வரம்பு மீறினால் அவ்வளவு தான்..! கொந்தளித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி...!
கதையின் தன்மை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இடைப்பட்ட அரசியல் மெசேஜ்கள் இந்தப் படத்தை ஒரு அதிரடி கலவையுடன் கூடிய தரமான திரைப்படமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனது படப்பிடிப்புகளுக்கு இடையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் சூர்யா. மனைவி ஜோதிகா, மகன் தேவ், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் சூர்யாவை மரியாதையுடன் வரவேற்று, தீர்த்தம், சடாரி, பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் சூர்யா கோயிலின் உள் வளாகத்தில் மனமுருகி வேண்டியதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே பக்தி சார்ந்த விசயங்களில் முனைப்பும் மரியாதையும் காட்டும் சூர்யா, இவ்வருடம் இவ்வாறு குடும்பத்துடன் பக்தியோடு தரிசனத்தில் ஈடுபட்டிருப்பது அவரது நம்பிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மேலும் திருப்பதி கோயிலில் சூர்யாவை கண்டு ஆச்சரியப்பட்ட பல பக்தர்களும், ரசிகர்களும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் அவரிடம் சினிமா குறித்த அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர். அதேவேளை, ஒரு பக்தர் மிகவும் உருக்கமாக ஏழுமலையான் சிலையை சூர்யாவிற்கு பரிசாக வழங்கிய சம்பவம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை பெற்றது. இந்த நிகழ்வில் சூர்யா மிகவும் நன்றி கூறி, அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.
சினிமாவில் மட்டுமல்லாது, சமூக சேவைகளிலும், கல்விக்கான தொண்டு முயற்சிகளிலும் முனைப்பாக செயல்படும் சூர்யா, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் விமர்சனத்திற்கும் பக்திக்குமான இடைவெளியோடு சமநிலையாக நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தனது அழகுக்கான காரணம் இதுதான்..! பாரம்பரிய ரகசியத்தை உடைத்த நடிகை தமன்னா பாட்டியா..!