உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு பதவியா..! இவரு ஓட்டு போட்டாத்தான் இனி எல்லாமே..!
நடிகர் கமல்ஹாசனை வாக்களிக்கும் பட்டியலில் சேர்த்த பிரபல நிறுவனம்,
'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்றும் 'ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது' என பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிரடியாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை இன்றளவும் மக்கள் அனைவரும் மிஸ் பண்ணி கொண்டுதான் இருக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் படங்களில் நடித்தாலும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் தனக்கான ரசிகர்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
இப்படிப்பட்ட கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல்,
இதையும் படிங்க: ஓ.. மனைவியை இப்படியும் கோபப்படுத்தலாமா... தனது வாழ்க்கை பற்றி பேசி ஆர்த்தியை கடுப்பாகிய ரவி மோகன்..!
இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி,இந்தியன், உல்லாசம், காதலா காதலா, தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி பல படங்களில் நடித்தாலும் சினிமா உலகில் பல ஏற்ற தாழ்வுளை கண்ட கமல்ஹாசன் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தார். ஆனால் அவருடைய காத்திருப்புக்கு பலனாக வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி, மீண்டும் கமல்ஹாசன் என்ற பெயரை மக்கள் மனதில் ஒலிக்க செய்தார். இப்படி பட்ட கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் வியாபார அமைப்பான 'பிக்கி' அதாவது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தக்லைஃப் படத்தில் நடித்து இருந்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு-வும் நடித்து இருந்தார். இந்த சூழலில் இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகி வசூலில் தோல்வியடைந்தது. மேலும் கர்நாடகாவிலும் மொழி பிரச்சனை காரணமாக இவரது படம் வெளியாக வில்லை. இதனாலும் கமல் ஹாசன் தற்பொழுது வருத்தத்தில் இருந்தார்.
இப்படி இருக்க அவரை குஷி படுத்தும் விதமாக அடுத்த விஷயம் நடந்துள்ளது. அதன்படி, திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக விளங்கும் ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய உலகம் முழுவதும் உள்ள 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் அடங்குவர். குறிப்பாக ஜூன் 26 ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா உள்ளிட்டவர்களுக்கு அழைப்பது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவேளை இவர்கள் அனைவரும் இதில் இணைய சம்மதித்தால் ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். மேலும் இதில் நடிகர் கமல்ஹாசன் இணைய சம்மதித்தால் அகாடமியில் வாக்களிக்கும் உரிமையை பெறுவார். குறிப்பாக இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கிட்டத்தட்ட 41% பெண்களும், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் தயவு செய்து சம்மதம் சொல்லுங்க கமல் என இணையத்தில் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன படம்-யா இது.. நடிக்கல வாழ்ந்து இருக்காங்க..."கண்ணாப்பா" படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன்..!