முடிவுக்கு வந்த நடிகை சோனாவின் ஹார்டிஸ்க் பிரச்சனை..! நடிகர் சங்கத்தால் கிடைத்த வெற்றி..!
நடிகர் சோனாவின் போராட்டத்திற்கு பின் நடிகர் சங்கத்தார்களின் தலையிட்டால் வெற்றி கிடைத்துள்ளது.
சினிமா பலரை வாழவைக்கும் சிலரது வாழக்கையை புரட்டி போடும் அந்த வகையில் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பிறந்தவர்கள் இன்று இல்லை. ஒரு நாள் முதல்வன் போல் ஒருநாள் நடிகர் நடிகைகளாக மறைந்து போய் இருக்கின்றனர். ஆனால் படத்தில் ஹீரோ ஹீரோயின்களுக்கு இருக்கும் மவுசுகளை விட கவர்ச்சி கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சி நடனம் முதலியவைகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் சற்று அதிகமாகவே இருக்கும்.
இப்படி இருக்க, டிஸ்கோ சாந்தி, சில்க் சுமிதா என பல கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கின்றனர். அவர்கள் வரிசையில் கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்தவர் தான் நடிகை சோனா. இவர் "பூவெல்லாம் உன் வாசம்" என்ற படத்தில் ஜோதிகாவுக்கு தோழியாக நடித்து இருப்பார்.
ஆனால் அந்த படத்தை தவிர இவர் நடித்த எல்லா படங்களிலுமே கவர்ச்சி வேடங்களிலேயே நடித்தார். இவரது நடிப்பில் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் என்று பார்த்தால் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படமான குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவுக்கு துணைவியாராக நடித்து தான்.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டே நடனத்தை பார்க்க தயாரா..! 'ஜனநாயகன்' பட அடுத்த அப்டேட் இதோ..!
அதில், நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்தால் மட்டுமே நாம் ஒன்று சேர முடியும் என சோனா கூற, வடிவேலு ரஜினியிடம் போட்டோ வாங்க படாதபாடுபடுவார். அதுமட்டுமல்லாமல் தன் மனைவியான சோனா உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜன்னலில் இருந்து அவரது அழகை ரசித்த வடிவேலு, அங்கு வந்த போலீசிடம் ஒவ்வொரு ஆங்கிளையும் காண்பித்து காமெடி செய்து கடைசியில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து விடுவார் .
இப்படத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்த சோனா, சீரியலில் நடிக்க போகிறார் என்ற செய்திகள் வலம் வந்தன. அதற்கு பின் சினிமாவில் இருந்து முற்றிலும் காணாமல் போனார் சோனா. அதுமட்டுமல்லாமல் நடிகை சோனா படங்களில் நடிப்பதை தாண்டி "சோனா Uniq" என்ற பேஷன் கடையும் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவர் அளித்து வரும் பேட்டிகள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் குறிப்பாக சில நடிகர்கள் குறித்தும், இயக்குனர்கள் குறித்தும் அவர் அளித்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இப்படி இருக்க, பெப்சி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் குதித்த சோனா, தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக பல ஏமாற்றங்களுக்கு பின் தயாரித்து, இயக்கி, நடித்து வருவதாகவும், இந்த தொடரின் படப்பிடிப்பு புட்டேஜ் அடங்கிய "ஹார்டிஸ்கை" படத்தில் பணியாற்றிய மேனேஜர் சங்கர் என்பவர் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், அவருக்கு ஆதராவாக பெப்சி செயல்படுவதாகவும் கூறி, கடும்கோபத்துடன் பெப்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்.
இந்த பிரச்சனை பூதாகரமாக, நடிகர் சங்கம் தலையிட்டு தற்பொழுது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹார்டிஸ்கை சோனாவிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் மிகவும் சந்தோஷமடைந்த நடிகை சோனா, இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் "நான் ஒரு விஷயத்துல இறங்கிவிட்டால் அதற்கு தீர்வு காணாமல் விட்டதே இல்லை. எப்படியோ... இந்த ஹார்டிஸ்க் விஷயம் நல்ல படியாக முடிந்திருக்கிறது.
இதில் நடிகர் சங்கம் தலையிட்ட உடனே பெப்சி நிறுவனத்தின் முக்கிய அமைப்பினர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் எனக்கு துணையாக நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். என் தரப்பு நியாத்தை முழுமையாக கூறினேன். இரு தரப்பும் என் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து ஹார்டிஸ்கை என்னிடம் கொடுத்தார்கள். இந்த விஷயத்தில் எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பணியை நான் விரைவாக தொடர்வேன்" என்றார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உழைப்பு உங்களுடையாதாக இருப்பதாலும், உங்கள் பக்கம் நியாயம் இருப்பதாலும் இன்று வெற்றி அடைந்து இருக்கிறீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்...! மாலையில் வெளியாகி வசூலை வாரி குவித்த "வீர தீர சூரன்"..!