×
 

அன்று சீரியல் நடிகை இன்று ரூ.1200 கோடிக்கு அதிபதி..! பிஸினஸில் கொடிகட்டி பறக்கும் ஆஷ்கா கோரடியா..!

நடிகை ஆஷ்கா கோரடியா ஒரே பிஸினஸில் ரூ.1200 கோடிக்கு அதிபதியாக மாறியது எப்படி என்பதை குறித்து மனம்திறந்திருக்கிறார்.

இந்திய திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் தனது அபாரமான நடிப்பை காண்பித்து சினிமாவை மட்டுமே நம்பி இல்லாமல், பல துறைகளில் தங்கள் முன்னேற்றத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, சினிமா மூலம் சம்பாதிக்கும் வருமானத்தை அவர்கள் சுயதொழில்களில் முதலீடு செய்யும் புதிய நடைமுறைகளை, மிகவும் வேகமாக செய்து தொடர்ந்து வளர்ந்து வருகின்றனர். அதன்படி, கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா, காஜல் அகர்வால், கிருத்தி சனோன், நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகைகள் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்களில் தங்களை நிறுவி வருகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு நடிகையின் வாழ்க்கை, "வேடங்களில்" மட்டுமே இல்லாமல், வணிகதுறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த வரிசையில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படும் பெயர் நடிகை ஆஷ்கா கோரடியா தான். ஏன்? அவரது பெயர் இன்று நாடுமுழுவதும் ஒலித்து கொண்டிருக்கிறது.. அதற்கான காரணம் என பார்த்தால், ஆஷ்கா கோரடியா, இந்திய சின்னத்திரை உலகில் பெயர் பெற்ற நடிகை. 2000-ம் ஆண்டில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர், பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்  “குஸும், காயாமத், லாடர் கே பாட்டி, நா அானாம் நா குயா, மற்றும் பாலி கா வதூ” போன்ற தொடர்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர். அதனை தொடர்ந்து, 2012-ல் வெளியான ரியாலிட்டி ஷோவான “Bigg Boss” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிகளவு கவனம் பெற்றார். ஆனால், 2019-ம் ஆண்டிற்குப் பின், திரையுலகை விட்டு முற்றிலும் விலகி, தனது வாழ்க்கையை ஒரு புதிய பாதைக்கு திருப்பினார். பல்வேறு தொடர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த போதே, ஆஷ்கா, தனது உண்மையான ஆர்வம் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஸ்கின் கேர் துறையில் இருக்கிறது என்பதை உணர்ந்தார். அதன்படி, தனது சேமிப்பிலிருந்து ரூ.50 லட்சம் முதலீட்டில், ஒரு அழகு சாதனப் பொருள் நிறுவனத்தை 2019-ல் தொடங்கினார்.

அவர் நிறுவிய பிராண்ட் ஆரம்பத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதுவே சில மாதங்களில் பல பெண்களின் விருப்பமான அழகு பொருள் பிராண்டாக மாறியது. முகம், உடல் மற்றும் முடி பராமரிப்பு தொடர்பான தயாரிப்புகள், இயற்கை அங்கீகாரம் பெற்ற உபகரணங்கள் மற்றும் விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பாக செயல்பட்டதால், அதன் வளர்ச்சி வேகமாக இருந்தது. ஆரம்பத்தில் சாதாரண முயற்சி என்று நினைத்த இந்த வணிகம், முதல் 2 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது. இயற்கை மற்றும் கெமிக்கல் இல்லாத தயாரிப்புகள், தனி நபரின் தேவைகளை புரிந்து உருவாக்கப்பட்ட தயாரிப்பு வரிசைகள், இணையத்தில் சரியான விளம்பர மேலாண்மை, குறைந்த விலையில் தரமான பொருட்கள் போன்றவைகளை கொண்டு இந்த வெற்றியை ஏற்படுத்திய ஆஷ்கா, தனது நிறுவனத்தை மேலும் பெரிதாக்கும் திட்டங்களில் ஈடுபட்டார். தற்போது, இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை நிலையங்கள் உள்ளன. ஆஷ்கா தனது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படி இருக்க, ஒரு நடிகையாக வாழ்க்கையை தொடங்கி, வணிகத் துறையில் வெற்றி கண்ட ஆஷ்காவின் சொத்து மதிப்பு இன்று ரூ.1200 கோடியை தாண்டியுள்ளதாக முக்கிய பொருளாதார ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: "தமிழ் சினிமா தான் எனது வாழ்க்கையை மாற்றியது"..! நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓபன் டாக்..!

இது, இந்திய திரையுலகில் இருந்து வணிகத்தில் கலக்குகிற பெண்களின் பட்டியலில், ஆஷ்காவையும் முதன்மையான இடத்தில் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து பேட்டியின் வாயிலாக பேசிய ஆஷ்கா, தனது வெற்றிக்கு பின்னால் இருக்கும் துன்பங்களை பகிர்ந்துள்ளார். அதில், " நான் நடிப்பில் எல்லாம் சாதிக்கவில்லை. எனக்கு விருப்பமான வேடங்கள், கதைகள் என எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதில் நான் என் நம்பிக்கையை இழக்கவில்லை. நான் என்னை வணிகத்தில் பிழைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் கட்டமைத்தேன். ஆரம்ப முதலீட்டில் கூட சிலர் சிரித்தனர். ஆனால், நான் என் தயாரிப்புகளுக்குள் நம்பிக்கை வைத்தேன். இன்று அந்த நம்பிக்கையே என் வெற்றியின் அடித்தளமாக மாறியுள்ளது" என தெரிவித்தார். பெண்கள் தங்கள் பிரபலத்தையும், நிதியையும் வணிக வெற்றியாக மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் ஆஷ்கா கோரடியா சின்னத்திரை உலகிலிருந்து பெரும் வளர்ச்சி பெற்ற வணிக வெற்றியாளராக மாறியுள்ளார்.

திரையுலகில் இருந்து விலகி, புதிய கனவுகளை நோக்கி பயணிக்க துணிந்தவர் ஆஷ்கா கோரடியா. முன்னணி நடிகையாக இல்லையெனில் வியாபாரத்தில் முன்னிலை பிடிக்க முடியாது என்பது தவறான எண்ணம் என்பதை நிரூபித்துள்ளார். அவரது தனித்த முடிவும், விடாமுயற்சியும், இன்று அவரை இந்தியாவின் சிறந்த பெண் தொழில் அதிபர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ரஜினியா..! இயக்குநர் கொடுத்த ஷாக் நியூஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share