தனது மகனுடன் சந்தோஷமாக இருக்கும் நடிகை அமலா பால்..! கியூட் கிளிக்ஸ் இதோ..!
நடிகை அமலா பால் தனது மகனுடன் சந்தோஷமாக இருக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்த நடிகை அமலா பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர்.
அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார்.
இதையும் படிங்க: நடிகர் மம்முட்டி ரிட்டன்ஸ்..! பல போராட்டங்களுக்கு பின் வெளியாகிறது 'MMMN' பட டீசர்..!
பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார்.
தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார்.
இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார்.
மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அபார திறமையை காட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்படி இருக்கையில், ஜகத் தேசாய் மற்றும் அமலா பால் தம்பதிக்கு அழகிய ஆண்குழந்தை இருக்கும் நிலையில், தற்போது மகனுடன் அமலா பால் இருக்கும் அழகிய போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'நாயகன்' படம் நினைவிருக்கா...! உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ்..படக்குழு அறிவிப்பு..!