மாடர்ன் உடையை விட சேலையில் அழகை கூட்டிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!
நடிகை அனுபமா பரமேஸ்வரன், மாடர்ன் உடையை விட சேலையில் அழகை கூட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன், தனது அழகும் இயல்பும் கலந்த தனித்துவமான ஸ்டைலால் எப்போதும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் அனுபமா, சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: வில்லனை வீழ்த்த வில்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்..! ஹைப்பை ஏற்றும் ரிவால்வர் ரீட்டா- திரைவிமர்சனம்..!
தினமும் புதிய புகைப்படங்கள், நிகழ்ச்சி அப்டேட்டுகள், ஃபேஷன் ஷூட்கள் என ரசிகர்களுடன் இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி.
இந்நிலையில், இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் சேலை அணிந்த அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாரம்பரிய அழகை ஸ்டைலுடன் கலந்த இந்த புகைப்படத் தொகுப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சிகப்பு மற்றும் கிரீம் கலவையிலான சேலை, லேசான மேக்கப், சிம்பிளான ஆபரணம், நெற்றியில் கும்குமம் மேலும் அழகை கூட்டியுள்ளது.
அனுபமா தற்போது பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களிடையே எப்போதும்விட அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ள இவர், திரைப்பட படப்பிடிப்புகளுக்கிடையில் இவ்வாறான ஃபேஷன் புகைப்படங்களை பகிர்வது வழக்கமாகி வருகிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த இயக்குநர்கள்..! இன்று ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாம்.. திணறும் சினிமா பிரியர்கள்..!