×
 

விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வரும் நடிகைகள்..!

விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வரும் நடிகைகள் லிஸ்ட் இதோ.

இந்தியாவின் மரபு மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் பிரதான துவக்கமாக விளங்கும் விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று மிகுந்த பக்தி பரவலோடு, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் பக்தியில் மூழ்கி, வீடுகளில் கலர்புலரான கோலங்கள், சாமி சிலைகள், மற்றும் பூஜைகளால் மகிழ்ந்தனர். இந்த மகிழ்வில் முக்கிய பங்காற்றியவர்கள் திரையுலகக் பிரபலங்களும் ஆவர். தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை பல்வேறு நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை நிறுவி, உற்சாகமாக பூஜை செய்தனர்.

சமூக வலைதளங்களில் அவர்களது புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. தமிழ் சினிமாவில் இருந்து பல முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடுகளில் ஈடுபட்டனர். வீடுகளில் சிறப்பு அலங்காரங்கள், கோலங்கள் மற்றும் நெய்வேதியங்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. குறிப்பாக அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சிம்பு உள்ளிட்டோர் தங்களது இல்லங்களில் விநாயகர் வழிபாட்டை நடத்தி மகிழ்ந்தனர். பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களிலும் இந்நிகழ்வை பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இதில், சிலர் விநாயகர் பாட்டி பாடல், சிலர் வீட்டு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பூஜை செய்த வீடியோவுடன் பதிவிட்டுள்ளனர். அதில் மும்பை, இந்தியாவின் சினிமா தலைநகராக விளங்கும் இடத்தில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பது ஒரு சமூக–மார்க்கெட் கலந்த விழா ஆகவே மாறியுள்ளது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் யூனிவர்சில் அடியெடுத்து வைத்த ரவி மோகன்..! LCU நுழைவாரா..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகை ஹன்சிகா மோத்வானி, நேற்று மும்பை நகர வீதிகளில் புதிய விநாயகர் சிலையை வாங்கி கண்ணியமாக தனது காரில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விநாயகர் வந்தார்... வீடு ஒளிமயமாவதற்கான நேரம் இது” என பதிவிட்டிருந்தார். அவரை தொடர்ந்து நடிகை ரகுல் பிரீத் சிங் தனது கணவர் ஜாக்கி பக்னானியுடன் சேர்ந்து இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தின. இருவரும் பாரம்பரிய உடைகளில் பக்தியுடன் விழாவை கொண்டாடியது ரசிகர்களிடம் உருக்கம் ஏற்படுத்தியது. பின்னர் ஷ்ரத்தா கபூர் – தன் வீட்டு பூஜைக்கு விநாயகர் சிலை வாங்கி வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அடுத்து கத்ரீனா கைப் – அவரும் தனது வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட புகைப்படங்களை வெளியிட்டு, "இது என் வீட்டின் புதிய தொடக்கம்" என பதிவிட்டார். நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி குடும்பமும், ஆண்டுதோறும் நடத்தியபடி, பம்பரளான விநாயகர் பூஜையை விருந்தினர்கள் முன்னிலையில் நடத்தினர். நடிகை ராதாவின் பகிர்வு - 'பழைய கால தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராதா, தனது வீட்டு விநாயகர் பூஜையின் வீடியோவினை' பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் அவர், பூஜை பொருட்கள் தயார் செய்யும் காட்சிகள், விநாயகர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தருணங்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நெய்வேதியம் சமர்ப்பிக்கின்றனர். அவரது பதிவில், "இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்கிறோம். எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். இப்படியாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சமூக வலைதளங்களில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப்,எக்ஸ் மூலம் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள், பூஜை நேரலைகள் பகிரப்பட்டன. அவற்றில் சில, வீடுகளில் பக்குவமா செய்யப்பட்ட மோதகம், சாமி அழகு செய்யப்பட்ட மஞ்சள், குங்கும அலங்காரம், இசை நிரம்பிய விநாயகர் பஜனை காட்சிகள், பக்தியையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. இப்படி இருக்க விநாயகர் சதுர்த்தி என்பது வாழ்க்கை தொடக்கத்திற்கு தேவையான தடையைக் களைப்பவர் என்று நம்பப்படும் விநாயகரை துதிக்கக் கூடிய நாள். திரையுலக பிரபலங்கள், தங்கள் ஒவ்வொரு புதிய படத் தொடக்கத்திலும் விநாயகரை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு, அந்த பக்தியும், பாரம்பரியமும் குடும்ப உறவுகளோடு இணைந்து கொண்டாடப்பட்டது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மற்றும் மலையாள திரையுலகங்களை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த பதிவுகள் இதனை உறுதி செய்கின்றன.

ஆகவே விநாயகர் சதுர்த்தி, இந்தியாவின் ஆன்மிக வாழ்வில் மட்டும் இல்லாமல், சினிமா, கலாசாரம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்டது. திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்பு, பக்தியில் ஆன்மிகம், வீடுகளில் அமைதியான கோலாகலம், சமூக வலைதளங்களில் பகிர்வு என அனைத்தும் இந்த பண்டிகையின் உண்மை அர்த்தத்தை உணர்த்துகிறது.
 

இதையும் படிங்க: அனிருத் குரலில் எஸ்.ஜே.சூர்யா சேட்டையில்...வெளியானது பிரதீப் ரங்கநாதனின் 'LIK' படத்தின் 'First Punch'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share