Divorce-க்குப் பிறகு மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி..!! புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!
Divorce-க்குப் பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானியின் புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி இளம் நடிகையாகவும், ரசிகர்களால் “சின்ன குஷ்பு” என அன்போடு அழைக்கப்பட்டவருமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சேலை லுக்கில் மயக்கிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! வைரலாகும் புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ்..!
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அவரது சமீபத்திய புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
வெளிநாட்டு பின்னணியில் எடுத்த இந்த புகைப்படங்களில் ஹன்சிகா நவீன மற்றும் கிளாமர் ஸ்டைலில் தோன்றியுள்ளார்.
குட்டை உடைகள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பகிர்வுகளை பெற்று வருகின்றன. பல ரசிகர்கள் அவரது அழகு மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்..!! தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம்..!