×
 

வயசானாலும்.. அழகும்.. ஸ்டைலும் இன்னும் மாறல..!! சிகப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ஜோதிகா..!

சிகப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ஜோதிகாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிகா.

“ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…” என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தனது நடிப்பு, எளிமை மற்றும் திரைமுக வெளிப்பாட்டால் தனித்த இடத்தை பிடித்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முக்கியமான கதாநாயகியாக வலம் வந்தார்.

இதையும் படிங்க: கிளாமர் லுக்கை விட ட்ரான்ஸ்பரென்ட் சேலை லுக் சூப்பரா இருக்கே..!! நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி போட்டோஸ் ரிலீஸ்..!

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், குடும்ப பின்னணி கொண்ட கதைகள் முதல் வலுவான பெண் கதாபாத்திரங்கள் வரை பல்வேறு வகை வேடங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

திரைப்படங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், நடிகர் சூர்யா உடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்து சில காலம் சினிமாவிலிருந்து விலகினார்.

அந்த காலகட்டத்தில் குழந்தைகள், குடும்ப பொறுப்புகள் என தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், திரை உலகில் இருந்து இடைவெளி எடுத்திருந்தாலும் ரசிகர்களின் நினைவில் என்றும் நீங்காத நடிகையாகவே இருந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் திரைப்பட உலகிற்கு வலுவான திரும்பும் முயற்சியில் ஜோதிகா ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கதையம்சம் கொண்ட படங்கள் மற்றும் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், அவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சமூக கருத்துகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களிலும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். குறிப்பாக வெப் தொடர்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் கதைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

இதையும் படிங்க: விஜய் CM ஆகிட்டாரு.. 'கருப்பு' படம் கலக்கிடிச்சி..!! இனி சினிமாவுல அடுத்து என்ன படம் வரப்போகுது தெரியுமா.. லிஸ்ட் இதோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share