வெள்ளை நிற குட்டை உடையில் அழகு தேவதையாக மின்னிய பார்வதி நாயர்..!! ஆப்பிளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
நடிகை பார்வதி நாயர் வெள்ளை நிற குட்டை உடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் அழகிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த இவர், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
குறிப்பாக அஜித்துடன் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பார்வதி நாயருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன்பிறகு ‘உத்தம வில்லன்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபத்தில் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திலும் முக்கியமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார்.
இதையும் படிங்க: ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!
திரையுலகில் நடிப்புடன் சேர்த்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகின்றன.
பார்வதி நாயரின் சினிமா பயணம் மலையாளத்தில் வெளியான ‘பாப்பின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அதன்பிறகு தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
மாடலிங் பின்னணியில் இருந்து வந்ததால் கேமராவுக்கு முன்பு தோன்றுவதில் அவருக்கு இருக்கும் இயல்பான தன்னம்பிக்கையும், விதவிதமான தோற்றங்களை முயற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் அவரது புகைப்படங்களில் வெளிப்படுவது வழக்கம்.
தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ‘உத்தம வில்லன்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘கொடி விட்ட இடங்களை நிரப்புக’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’ என வெவ்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதேபோல், சமீப ஆண்டுகளிலும் அவர் நடிப்பை தொடர்ந்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் இருந்து விலகாமல் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார். 2025 பிப்ரவரி 10ஆம் தேதி தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை பார்வதி நாயர் திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தயாராகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீடு..!! ‘Common Man’ சிலை முதல் Secret Room வரை.. வெளியான ஹோம் டூர் ஸ்டில்கள்..!