33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மா..!! டைட்டானிக் ரோஸ் போல செம கவர்ச்சியாக வந்த பிரணிதா சுபாஷ்.. வைரலாகும் போட்டோஸ்.!
டைட்டானிக் ரோஸ் போல செம கவர்ச்சியாக பிரணிதா சுபாஷ் தோன்றி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
இதையும் படிங்க: சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் குறையாத ரசிகர்கள்.!! மஞ்சள் புடவையில் ஜனனி அசோக்குமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!
குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் பிரணிதா.
அவரது அழகும், நடிப்பும், திரையில் தோன்றிய விதமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தற்போது 33 வயதாகும் பிரணிதா சுபாஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிஸியாக இருந்த நடிகை, திருமணம் மற்றும் குழந்தைகள் பிறந்த பிறகு தனது குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
குழந்தைகள், குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருந்தாலும், தனது உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்திலும் பிரணிதா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சமீபத்தில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றான SIIMA விருது விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும்..!! பிறரை மகிழ்விப்பதில் கோடீஸ்வரன் தான்.. பார்த்திபனின் லேட்டஸ்ட் பதிவு வைரல்.!