‘ராமாயணா’வில் சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங்..!! எலிகன்ட் லுக்கில் வைரலாகும் போட்டோஸ்..!
ரகுல் ப்ரீத் சிங் எலிகன்ட் லுக்கில் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’.
இந்தியாவின் மிகப் பிரபலமான இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை பிரம்மாண்டமான திரை அனுபவமாக உருவாக்கும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!
ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் நிலையில், கன்னட நடிகர் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அதிகரித்துள்ளது. ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளி 2026 வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2027 தீபாவளி காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் கதை எந்தெந்த பகுதிகளை உள்ளடக்கியிருக்கும், முக்கியமான கதாபாத்திரங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, இதிகாசத்தின் முக்கிய சம்பவங்கள் எப்படித் திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘ராமாயணா’ படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்று ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான். இதுவரை பல்வேறு திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரன்பீர், முதன்முறையாக இதிகாச கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருப்பதால் அவரது தோற்றம் மற்றும் நடிப்பு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் ஆரம்பம் முதலே இருந்தது.
அதேபோல் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் திரை இணைப்பு படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான டிரைலரில் இருவரது கதாபாத்திரங்களின் தோற்றம் ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகமானது.
நான்கு நிமிடங்களுக்கும் மேலாக வெளியாகியுள்ள டிரைலரில் அயோத்தி, வனம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலகங்கள் பிரம்மாண்டமான காட்சியமைப்புடன் காட்டப்பட்டுள்ளன. ராமர், சீதை, ராவணன் ஆகியோருக்கு இடையேயான மைய மோதலுடன், இதிகாசத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல கதாபாத்திரங்களையும் டிரைலர் அறிமுகப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!