×
 

என் வாழ்க்கைய அழிச்சிட்டாங்க.. பொய்யான போதை பொருள் வழக்கால எல்லாமே போச்சு - கதறும் நடிகை..!

பொய்யான போதை பொருள் வழக்கால என் வாழ்க்கை இல்லாமே போச்சு என் நடிகை ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியாகவும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும், தனது சினிமா பயணத்தை நிரூபித்தவர். அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக சஞ்சனாவின் வாழ்க்கை பல விசாரணைகளால், குற்றச்சாட்டுகளால் மற்றும் தவறான நம்பிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது, தெலுங்கு பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அவர், தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய அதிர்ச்சிக் காரணங்களை, கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மேடையில், தனது அனுபவங்களை உணர்ச்சியுடன் பகிர்ந்த சஞ்சனா கல்ராணி அதில், “2020-ம் ஆண்டு, ஒரு போதைப்பொருள் வழக்கில் என்னை அநியாயமாக கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்தார்கள்.

அதனால் என் வாழ்க்கை நரகமாக மாறியது. ஒரு தருணத்தில், சாகவேண்டும் என்று கூட நினைத்தேன்” என்றார். அவரது இந்த வார்த்தைகள் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் பெரிதும் கலங்க வைத்தன. குறிப்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2020-ம் ஆண்டு சஞ்சனாவை கைது செய்தனர். போதைப்பொருள் சட்டங்களை மீறியதாக கூறி, NDPS Act கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, சஞ்சனா கல்ராணி சுமார் 3 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார். இது ஒரு நடிகையின் தொழில்முறை, தனிப்பட்ட வாழ்க்கை, மனநிலை ஆகியவற்றை முற்றிலும் தகர்த்துவிட்டது. மேலும் அவர் கூறுகையில், “அந்த நேரத்தில் நான் என்னால் வெளியில் வந்து சிரிக்க முடியவில்லை. என் திருமண செய்தியையும் மகிழ்ச்சியுடன் சொல்ல முடியவில்லை” என பிக்பாஸ் மேடையில் கூறிய சஞ்சனாவின் வார்த்தைகள் மிகவும் தார்மீக உணர்வுடன் இருந்தன.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதியாக, எந்த விதமான தடயங்களும், ஆதாரங்களும் இல்லாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, சஞ்சனா கல்ராணி நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தார். இதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அந்த நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, அவமதிப்பு, குடும்பத்தில் ஏற்பட்ட பதட்டம் ஆகியவை அவரை மனதளவில் நெருக்கடிக்கு தள்ளின. சஞ்சனா கல்ராணி, இந்த சிக்கலான காலப்பகுதியின்போது, அஜித் பாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். “என் வாழ்க்கையின் அந்த சூழ்நிலையில் எனக்கு தோளாக இருந்தது என் கணவர். அவர்தான் என்னை தைரியப்படுத்தினார். இப்போதும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அனுப்பி, மீண்டும் ஒரு தடவை என்னை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அளித்தார்” என அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சைமா விருது விழாவில்"ஹிட் லிஸ்ட்" படத்துக்கு 3 அவார்டாம்..! துள்ளிக்குதித்த இயக்குனர்..!

திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் கூட, சட்ட சிக்கல்களின் காரணமாக மகிழ்ச்சியுடன் அறிவிக்க முடியாத நிலைமை, அவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியது. இப்படி இருக்க சஞ்சனா கல்ராணி இந்த நிகழ்ச்சியை தனது பெயருக்கு வரவேண்டிய மரியாதையை மீட்டெடுக்கவும், தனது உண்மையான குணநலனையும் திறமையையும் உலகிற்கு காட்டும் வாய்ப்பாகவே பார்க்கிறார். “சஞ்சனா கல்ராணி யாரு என்று இப்போ இந்த நிகழ்ச்சியின் மூலமா எல்லாருக்கும் தெரியவரும். என் மீது இருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல இது ஒரு வாய்ப்பு” என அவர் கூறும் பேச்சு, அவரது நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் வெளிக்கொணர்கிறது. சஞ்சனாவின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு பலரும் சமூக வலைதளங்களில் ஆதரிக்க தொடங்கியுள்ளனர்.

ஆகவே சஞ்சனா கல்ராணி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கிறார். ஆனால் அந்த மேடை, அவருக்கு ஒரு வாழ்க்கை வாய்ப்பாக மாறியுள்ளது. தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்ட அவரது தொழில்முறை வாழ்க்கை, மீண்டும் பரிசுத்தமடைய, மக்களின் மனங்களில் உண்மையான சஞ்சனாவை காணப்பட செய்யும் முயற்சியில், இந்த நிகழ்ச்சி ஒரு புதிய தொடக்கமாக இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: பார்த்தா நடிகைகளின் ஆபாச படம் தான் பாப்பீங்களா..! வெட்கமா இல்ல.. வெளுத்து வாங்கிய அபர்ணா தாஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share