பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஷில்பா ஷெட்டி..!
நடிகை ஷில்பா ஷெட்டி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீதான மோசடி வழக்கு மீண்டும் பரபரப்பாகும் வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மும்பையில் வசித்து வரும் தொழில் அதிபர் தீபக் கோத்தாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு தொடங்கியிருந்தது.
இப்படி இருக்க தீபக் கோத்தாரி, மும்பையின் ஜூகு பகுதியைச் சேர்ந்தவர். அவர் அளித்த புகாரின்படி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, தங்களது 'Best Deal TV' என்ற ஹோம் ஷாப்பிங் சேனலில் முதலீடு செய்யுமாறு அவரை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. இதில், ரூ. 60 கோடியே 48 லட்சம் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். ஆனால், குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி முதலீட்டு தொகைக்கு எதிராக வருமானம் மற்றும் பங்கீடு என எதுவுமே அவருக்கு வழங்கப்படவில்லை. மேலும், அந்த பணத்தை திருப்பி கொடுக்காததோடு, எந்தவொரு விளக்கமும் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இது ஒரு திட்டமிட்ட மோசடி எனக் கருதப்படும் வகையில் தீபக் கோத்தாரி புகார் அளித்தார். தனது புகாரின் அடிப்படையில், மும்பை போலீசார் கடந்த மாதம் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மற்றும் மேலும் ஒருவர் உட்பட மூன்று பேர் மீது ஏமாற்றும் நோக்குடன் பணம் பெற்று, திருப்பித் தராமல் மோசடி செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, பெரும் தொகை பண மோசடியுடன் தொடர்புடையதாகவும், பலமான ஆவண ஆதாரங்கள் தேவைப்படுவதால், வழக்கு விசாரணை மும்பை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்கமைய, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கின் கீழ் முதலில் ராஜ் குந்த்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் விசாரணை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தகவல்களை கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, விசாரணை ஷில்பா ஷெட்டியின் மேல் கவனம் செலுத்தியது. அண்மையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக நடிகை ஷில்பா ஷெட்டியை பொருளாதார குற்றப்பிரிவு அழைத்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: விரைவில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை..! பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!
இந்த விசாரணை சுமார் 4 மணி 30 நிமிடங்கள் நீடித்ததாக தெரிய வருகிறது. விசாரணையின் போது, பங்குத்தாராளருக்கான உறுதி மொழிகள், முதலீட்டு உடன்பாடுகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில், தற்போது வரை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மற்றும் மேலும் மூன்று பேர் என மொத்தமாக 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூல்கள் மற்றும் ஆவணங்கள் வழக்கை புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சில வாரங்களாகவே வதந்திகளும் ஊகங்களும் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
இப்போது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கியதால், இந்த வழக்கு எந்த முடிவிற்கு செல்லும் என பெரும் ஆர்வம் உருவாகியுள்ளது. இந்த Best Deal TV என்பது, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோம் ஷாப்பிங் சேனல் ஆகும். இதில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா முக்கிய பங்குதாரர்களாக இருந்தனர். திரைப்பட நடிகர் ஆக்ஷய் குமார் உட்பட பல பிரபலங்கள் இந்த சேனலின் விளம்பரங்களில் தோன்றியிருந்தனர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும், சில ஆண்டுகளில் தொழில்முனைவு கடுமையான நட்டம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே பெரும் தொகை முதலீட்டு மோசடி குறித்த இந்த வழக்கில், தற்போது ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிமன்ற கட்டத்தை எப்போது எட்டும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமா, அல்லது நீதிமுறை அவர்கள் ஆதரவாக தீர்மானிக்குமா என்பதற்காக நாடு முழுவதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், விரைவில் வழக்கில் புதிய திருப்பங்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: விரைவில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை..! பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!