நெருக்கமான காட்சிகளில் என்ன தவறு உள்ளது.. அது வாழ்க்கையின் ஒரு அங்கம் தானே - நடிகை சுவாரா பாஸ்கர் ஓபன் டாக்..!
நடிகை சுவாரா பாஸ்கர், நெருக்கமான காட்சிகளில் என்ன தவறு உள்ளது என ஓபனாக பேசி இருக்கிறார்.
பாலிவுட் நடிகை சுவாரா பாஸ்கர், எப்போதும் தன்னுடைய நேர்மையான கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்துபவர். அவர் தன்னுடைய திறமையான நடிப்பால் மட்டுமல்ல, சமூக மற்றும் சினிமா தொடர்பான திறந்த மனப்பான்மை கருத்துகளாலும் அடிக்கடி தலைப்புகளில் இடம் பிடிப்பவர். அந்த வகையில் சமீபத்தில், ஒரு நேர்காணலில் திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகள் குறித்த அவரது கருத்துகள் மீண்டும் பெரிய விவாதத்துக்குள்ளாகியுள்ளன.
அவர் கூறிய வாக்கியங்கள், சினிமா உலகின் மாற்றத்தையும், பார்வையாளர்களின் மனநிலையையும் வெளிப்படுத்துகின்றன. இப்படி இருக்க சுவாரா பாஸ்கர், பாலிவுட் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்காக அறியப்பட்டவர். அவர் நடித்த “ராஞ்சனா”, “நில்பட் தே சன்னாதா”, “அனார்கலி ஆஃப் ஆரா” போன்ற படங்கள், அவரை வித்தியாசமான நடிகையாக ரசிகர்களிடம் நிலை நிறுத்தியது. குறிப்பாக தனுஷ் உடன் நடித்த “ராஞ்சனா” படத்தில் அவரது நடிப்பு சிறப்பாகப் போற்றப்பட்டது.
அந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையிலும் அவர் பெயர் பெற்றார். இந்த சூழலில் சமீபத்தில், ஒரு பிரபல டிஜிட்டல் மேகஸினுக்கு அளித்த பேட்டியில், சுவாரா பாஸ்கர் திரைப்படங்களில் காணப்படும் நெருக்கமான காட்சிகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “இப்போதைய தலைமுறையில் நெருக்கமான காட்சிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டன.
ஒரு காலத்தில் இதுபோன்ற காட்சிகள் வந்தால், மக்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆனால் இப்போது அவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. நான் பல முறை இப்படியான காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் அதை நான் ஒரு கலை வடிவமாகவே பார்க்கிறேன். இப்படியான காட்சிகள் இருந்தால், அதைப் பற்றி மக்கள் தவறாக நினைக்கக்கூடாது. அது ஒரு கதை சொல்லும் முறையின் ஒரு பகுதி தான். சில நேரங்களில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேவையில்லாத இடத்திலும் நெருக்கமான காட்சிகளை வைக்கிறார்கள். அது கதை சொல்லலுக்கு உதவாது. ஆனால் வணிக நோக்கத்திற்காக சில காட்சிகளை சேர்க்கும் பழக்கம் இன்னும் நிலவுகிறது. இதுவே சில சமயங்களில் நடிகைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நெருக்கம் என்பது ஒரு உணர்ச்சி. அது வெறும் உடல்நிலை அல்ல. அதை நாமே தடைசெய்து, மறைத்து, தவறாகப் பார்க்க ஆரம்பித்தால் தான் பிரச்சனை உருவாகிறது. வாழ்க்கையில் நெருக்கமான உறவுகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: உங்களுக்கு மாஸ் கொடுக்க ஹீரோ.. கவர்ச்சி காட்ட மட்டுமே ஹீரோயின் இல்லையா - நடிகை ராதிகா ஆப்தே காட்டம்..!
அதைப் போலவே திரைப்படத்திலும் இருக்கும். அதை இயல்பாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். எனவே திரைப்படங்களில் ஒரு நெருக்கமான காட்சி வந்தாலே, சிலர் அதைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள். ஆனால் அதையும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பார்க்கும் பழக்கம் வந்தால், நம் சிந்தனை வளர்ச்சி அடையும். அதற்காக தான் நான் சொல்வது..‘மூளை’யே அதை இயல்பாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். அவர் கூறிய இந்த வாக்கியம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் பகிரப்படுகிறது. முந்தைய காலங்களில், நெருக்கமான காட்சிகள் இந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையாக கருதப்பட்டன. 90களில் கூட ஒரு ‘கிஸ்’ காட்சி வந்தால், அது தலைப்புச் செய்தியாகி விடும். ஆனால், இப்போது ஓடிடி தளங்களின் வளர்ச்சி காரணமாக, பார்வையாளர்கள் இதை மிகவும் இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர்.
அதைப் பற்றி பேசிய சுவாரா, “ஓடிடி தளங்கள் சினிமாவை மாற்றி விட்டன. அங்கே கதாபாத்திரங்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. அங்கே காட்சிகள், உணர்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன – வணிகத்துக்காக அல்ல. நடிகையாக இருப்பது எனக்கு ஒரு தளமாகும். அதைப் பயன்படுத்தி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்” என்றார். இதனால் அவர் சில சமயங்களில் ட்ரோல் செய்யப்பட்டாலும், தனது கருத்திலிருந்து ஒருபோதும் பின் வாங்குவதிவில்லை. சுவாராவின் இந்த பேட்டி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, டிரெண்டாகியது. பலரும் அவரின் திறமையையும், தைரியத்தையும் பாராட்டினர். சுவாரா பாஸ்கர் கூறிய கருத்துகள் ஒரு பெரிய கேள்வியை எழுப்புகின்றன. “திரைப்படங்களில் எது கலை, எது கிளாமர்?” என.
பல சமயங்களில், இந்த இரண்டின் எல்லை மங்கிவிடுகிறது. ஆனால் சுவாரா பாஸ்கர் கூறியபடி, அது கதை சொல்லலின் ஒரு பகுதி என்றால், அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே சமயம், அவர் எச்சரித்தது போல, தேவையில்லாத இடங்களில் அத்தகைய காட்சிகள் சேர்க்கப்படுவது தவறு. ஆகவே சுவாரா பாஸ்கர் எப்போதும் சமூக நெறிமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் குரலாக இருந்து வருகிறார். இம்முறை அவர் கூறிய “நெருக்கமான காட்சிகள் வாழ்க்கையின் ஒரு பகுதி” என்ற கருத்து,
சினிமா உலகத்தின் வளர்ச்சியைப் பற்றிய திறந்த மனப்பான்மை விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் சமூக சிந்தனைக்கும், சினிமா சுதந்திரத்திற்கும் இடையே சரியான சமநிலையை உருவாக்க சுவாரா பாஸ்கர் போன்ற குரல்கள் அவசியம் என்பதை இந்த பேட்டி மறுபடியும் நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: தியேட்டரில் நீங்க பயப்படாம இருந்தா சரி..! திகில் கிளப்பும் சோனாக்சி சின்ஹாவின் 'ஜடதாரா' பட டிரெய்லர் வெளியீடு...!