×
 

அந்த மாதிரியான ஒரு காட்சி.. 28 டேக்குகள்..! என்னால முடியல - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக்..!

நடிகை வித்யா பாலன், அந்த மாதிரியான ஒரு காட்சிக்கு 28 டேக்குகள் ஆனது தெரியுமா என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இந்தி சினிமாவில் தனக்கென தனித்த அடையாளம் கொண்ட நடிகை வித்யா பாலன், தனது முதல் படமான "பரினீதா"வில் நடித்த அனுபவங்களை குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசினார். கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி வெளியான பரினீதா, இன்று வரை பாலிவுட் ரசிகர்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் ஒரு மென்மையான காதல் திரைப்படம்.

இப்போது, இந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ள நிலையில், வித்யா பாலன் அளித்த அந்த நேர்காணல், திரையுலகில் ஒரு உண்மையான கலைஞனின் பயணத்தையும், தயாரிப்புப் பின்னணியின் சவால்களையும், ரசிகர்களுக்கு தெளிவாக வெளிக்கொணர்கிறது. அதன்படி பரினீதா திரைப்படம், பண்டைய பெங்காலி எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய 1914-ம் ஆண்டு நாவலின் திரைமாற்றம்.
இந்த கதையில் இடம் பெறும் மௌன காதல், குடும்ப வேற்றுமைகள், மற்றும் பெண்களின் உட்பகை உணர்வுகள், படத்தில் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டது. பிரதீப் சர்க்கார் இயக்கிய இப்படத்தில், வித்யா பாலன், சயிப் அலி கான், மற்றும் சஞ்சய் தத் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படியாக வித்யா பாலன், இந்தப்படம் மூலமாகவே பாலிவுட் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த அறிமுகம் சாதாரணமானது அல்ல.. அதற்குப் பின்னால் இருந்தது கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம், உணர்வுப்பூர்வமான நடிப்பு, மற்றும் புதிய நடிகையிடம் காட்டிய நிரம்பிய நம்பிக்கை. வித்யா, தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அனுபவங்களை பற்றி கூறுகையில், அது ஒரு "கலைஞன் கற்றுக் கொண்ட பள்ளி" போல இருந்தது என்று கூறுகிறார்.

அவர் பேசுகையில், "நான் இயக்குநர் பிரதீப் சர்க்காரிடம் இருந்து மிக அதிகம் கற்றுக்கொண்டேன். அவர் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து, முழுமையாக சித்தியடையவேண்டும் என்பதிலேயே அக்கறை கொண்டவர். அவர் தேவையெனில் 100 டேக்குகள் எடுக்க தயங்கமாட்டார். அதுமட்டுமல்ல உதாரணமாக அந்தப்பட காட்சியில் ஒரு வரியில் என் கண்ணீர்த் துளி விழவேண்டும் என்பதே நோக்கம். ஆனால் சயிப் (அலி கான்) எப்போதும் வேடிக்கையானவர். அவர் என்னை சிரிக்க வைப்பார். கண்ணீர் வர வேண்டிய தருணத்தில் நான் சிரித்து விடுவேன். அதனால் 28 டேக்குகள் ஆனது. இப்போதும் அதை நினைக்கும் போது சிரிப்பு வருகிறது" என்றார். அவரது இந்த பேச்சை கேட்கும் போது, ஒரு காட்சியை எடுக்க கலைஞர்கள் எதிர்கொள்ளும் உள் சவால்கள், எவ்வளவு உணர்வுப் பூர்வமானவையென புரிகிறது. "பரினீதா" படத்தின் 20-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி, இந்த திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: முதல்ல ஃப்ரெண்ட்ஸ்...அப்புறம் தான் 'லவ்' எல்லாம்..! நடிகை ருக்சார் தில்லான் கலகல பேச்சு..!

இது முதன் முறையாக படம் வெளியான நாள் ஜூன் 10, 2005 ஐத் தாண்டி புதிய தலைமுறையினருக்கு, பழைய காதல் கதைகளின் மென்மையையும், சிரிக்கவும் அழவும் வைக்கும் சினிமாவையும் பார்வையிட அருமையான வாய்ப்பு. நாம் திரையில் சில வினாடிகளில் காணும் உணர்வுகள், கண்ணீர், மென்மை போன்றவை, அதற்குப் பின்னால் இருக்கும் பணிநேரம், பயிற்சி, மன உறுதி ஆகியவற்றின் கூட்டு செயல்பாடுகளின் முடிவாகவே வருகிறது. இதற்காக ஒரு புதிய நடிகை, தனது முதற்படத்திலேயே, மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதைக் கற்பனை செய்தாலும்,
அது நம்மை அசந்து போக வைக்கும். நடிப்பும், கலைக்கும் இடையே உண்மையான உரையாடல் என்பது, மிகுந்த உழைப்பில் உருவாகும். மேலும் பரினீதா திரைப்படத்தின் இயக்குநராக இருந்த பிரதீப் சர்க்கார், சாதாரணமான காட்சிகளை தெளிவான நேர்த்தியுடன், உணர்வுகளுடன், நுட்பமாக உருவாக்கும் இயக்குநராக அறியப்படுகிறார். அவருடைய திடமான ஸ்கிரிப்ட், அழகிய ஃபிரேமிங், மற்றும் அவதானித்த பண்புகள், அவரை இந்திய சினிமாவின் மெல்லிய இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

குறிப்பாக வித்யா பாலன் இப்போது ஒரு பல விருதுகள் பெற்ற நடிகை மட்டுமல்ல. பெண்கள் நடிப்பின் சுதந்திரத்தையும், சமுதாயத்தையும் பிரதிபலிக்கும் ஓர் கலைஞர். அந்த பயணத்தின் தொடக்கம் தான் "பரினீதா". அந்தத் தொடக்கத்தை நினைவுகூரும் விதத்தில், 20 வருடங்கள் கழித்து இப்படம் திரையரங்கில் திரும்பி வரும் நிகழ்வானது, அர்த்தமிக்கதொரு நேர்த்தியான சுற்றுப்பயணமாகவே பார்க்கலாம்.

இதையும் படிங்க: படப்பிடிப்பின் பொழுது உதவி இயக்குனரின் உயிர் பிரிந்த சோகம்..! பணிகளை நிறுத்திய இயக்குநர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share