சொகுசு கப்பல் காரில் பிறந்த நாளை கொண்டாடிய ஆல்யா மானசா..! சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!
ஆல்யா மானசா தனது பிறந்த நாளை பிரம்மாண்டமான கப்பல் சொகுசு காரில் கொண்டாடி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் "பித்தல செம்பா....இல்ல...வெள்ளி செம்பா..." என இன்று வரை பலராலும் கலாய்க்கப்படும் நடிகையாகவும், தனது அழகால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகையாகவும் வலம் வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. முதல் முறையாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'டான்ஸ் நிகழ்ச்சியில்' கலந்து கொண்டு பலரது கவனத்தை உயர்த்த ஆல்யா மானசா, அப்பொழுதே தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இதனை அடுத்து, அவருக்கு ஜாக்பார்ட் அடிக்கும் வகையில் 'ராஜா ராணி' என்ற தொடரில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் செம்பா கதாபாத்திரத்தில் வேலைக்காரியாக இருக்கும் இவர் தான் வேலை செய்த இடத்தில் முதலாளி மகனான சின்னையாவை திருமணம் செய்து கொள்வார். இதனாலேயே இந்த சீரியல் டாப் ட்ரெண்டிங்குக்கு சென்றது. மேலும் பல ரோல்களையும் கடந்ததால் ஆலியா மானசாவின் பெயர் பல இளசுகளின் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்தது.
இதையும் படிங்க: எஸ்கேவின் 'பராசக்தி' பட டைட்டிலை கொடுக்க இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!
ராஜா ராணியில் சின்னையாவாக நடித்த சஞ்சீவுக்கும் செம்பாவாக நடித்த ஆல்யா மானசாவுக்கும் இடையே உண்மையாகவே காதல் தோன்ற இருவரும் பல நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு பெரிதாக தொலைக்காட்சிகளில் தோன்றாத ஆல்யா மானசா, instagram, youtube, facebook ஆகிய சமூக வலைதள பக்கங்களில் ஹோம் டூர், குழந்தைகள் வளர்ப்பு, வீட்டிலிருந்த படி பெண்கள் என்ன செய்யலாம் என தனது வாழ்க்கையில் நடப்பவைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்ததுடன் வருமானத்தையும் ஈட்டி வந்தார்.
பிறகு ஒருநாள் தனியார் தொலைக்காட்சியில் டிரேடிங் குறித்து பேசி வசமாக சிக்கிக் கொண்டார். இப்படி சம்பாதிப்பதில் கெட்டிக்காரியான ஆல்யா மானசா, கேரளாவில் போட் ஹவுஸ் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இப்படி சமூக வலைத்தளங்களிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் ஃபேமஸ் ஆக இருக்கும் ஆலியா மானசா அவரது பிறந்த நாளை துபாயில் சொகுசு கப்பல் போன்ற பிரம்மாண்டமான காரில் குடும்பத்துடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோக்களை தற்பொழுது இணையத்தில் பதிவிட பலரும் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்
அதே சமயம், ஆல்யா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவரும் நடித்துள்ள "கிளியோபட்ரா" என்ற பாடல் சரிகம பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதனை தனது insta பக்கத்தில் ட்டேக் செய்துள்ள ஆல்யா மானசா, பிறந்தநாள் வீடியோவையும் பதிவிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: சரத்குமாரை வம்புக்கு இழுத்த சீமான்... நெத்தியடி பதில் கொடுத்து அசத்திய சுப்ரீம் ஸ்டார்!!