சேலையிலும் இளசுகளை மயக்க தொகுப்பாளினி டிடியால் மட்டும் தான் முடியும்..! திவ்யதர்ஷினியின் அழகிய கிளிக்ஸ் வைரல்..!
தொகுப்பாளினி டிடி சேலையிலும் மயக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் தனித்துவமான நடையாலும், இயல்பான பேச்சாற்றலாலும் ரசிகர்களின் மனதில் நீண்ட காலமாக இடம்பிடித்திருப்பவர் தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி).
விஜய் டிவி மூலம் பிரபலமான அவர், வெறும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களின் “வீட்டு பெண்” என்ற அளவிற்கு ஒரு நெருக்கமான முகமாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!
அந்த அளவிற்கு, அவர் நிகழ்ச்சிகளில் காட்டும் எளிமை, சிரிப்பு, உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை ஆகியவை அவரை மற்ற தொகுப்பாளர்களிடமிருந்து தனித்து நிற்கச் செய்துள்ளது.
சமீப காலமாக டிடி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்தது. குறிப்பாக, அவரது சகோதரரின் திருமண நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வேகமாக வைரலானது.
பாரம்பரிய உடைகள், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சியான தருணங்கள், சடங்குகளில் கலந்து கொண்ட அழகிய காட்சிகள் என அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
“டிடி எப்போதும் போலவே இயல்பாகவும் அழகாகவும் இருக்கிறார்” என்ற கருத்துகள் அந்தப் பதிவுகளின் கீழ் குவிந்தது.
திருமண நிகழ்ச்சிப் புகைப்படங்களில், டிடி பாரம்பரிய பட்டுப்புடவைகள், மென்மையான மேக்கப், சிம்பிள் நகைகள் ஆகியவற்றுடன் தோன்றியது, அவரது எளிமையான அழகை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியது.
இதையும் படிங்க: வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!