இதெல்லாம் ஒரு ஆசையா.. ஷாக்கில் உறைய வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்..!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது ஆசையை குறித்து சொல்லி அனைவரையும் வாயடைக்க செய்துள்ளார்.
இந்திய இசைத்துறையில் இன்றைய சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடல்களுடன், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இசையமைத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூபில் வெளியானதுமே ஒரு நாளுக்குள் மில்லியன் பார்வையாளர்களை எட்டும் சாதனையை எளிதாகப் பெற்று விடுகிறது. ஹாட் டிரெண்டிங்கில் அடிக்கடி இடம்பிடிக்கும் அனிருத்தின் இசை, இன்றைய இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்தில் வெளியான "விக்ரம்", "ஜெயிலர்", "லியோ" போன்ற படங்களில் அவரது இசை ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது "கூலி", "ஜனநாயகன்", "மதராஸி", "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி", "ஜெயிலர் 2" போன்ற தமிழ் படங்களுக்கும், தெலுங்கில் சில முக்கியமான பெரிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். 2025-ல் வெளியாகவுள்ள இந்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள அனிருத், சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது “வித்தியாசமான” ஆசையை பகிர்ந்துள்ளார்.
அதில், " நான் யாருக்குமே தெரியாமல் போகும் ஒரு வரம் கிடைத்தால், பேருந்தில் பயணம் செய்வேன். பள்ளி நாட்களில் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து செல்லும் அனுபவம் என் மனதில் இன்று வரை நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த மாதிரி பயணம் செய்ய முடியவில்லை என்பதே ஒரு வருத்தமாக உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் போது சில நேரங்களில் பேருந்தில் பயணிக்கிறேன். ஆனால், என் நாட்டில் என்னால் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சபச்ச கவர்ச்சியில் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்...!
இசைப் பயணத்தில் சிறுவயதிலேயே பலருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய அனிருத், இன்று இசையில் ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும், தனது பள்ளி நாட்களின் பேருந்துப் பயணத்தையே மறக்காமல் நினைத்து வருகிறார் என்பது அவரது எளிமையை வெளிக்காட்டுகிறது. அனிருத் இவ்வாறு கூறிய இந்த விடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அனிருத் தனது அசாத்திய வெற்றிக்கு பின்னாலும், ஒரு சாதாரண மனிதனின் வாழ்கையின் இனிய பக்கங்களை தொடர்ந்து ஏங்குகிறார். சின்ன வயதில் பள்ளிக்கூடம் முடிந்து நண்பர்களுடன் பேருந்தில் பயணித்த நாள்கள் தான் வாழ்க்கையின் முக்கியமான நினைவுகள் என எண்ணும் அவரது எண்ணம், இன்று பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரபலங்களாகிய பின்பும் அவர்கள் வாழ்க்கையில் எதை உண்மையாக நினைத்து விரும்புகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
பெரும்பாலான தொகையிலும், பெருமையில் திளைக்கும் இசையமைப்பாளராக இருப்பவரும், சாதாரணமாக ஒரு பேருந்துப் பயணத்தை விலை மதிப்பில்லாததாக நினைக்கும் ஒருவராக இருக்கிறார் அனிருத்.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் நடிகை மிருணாளினி ரவி..! ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!