×
 

அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் மாற்றம்...! புதிய தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிப்பு..!

அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த அனிருத் இசை நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் வகையில் இசையமைத்து வருகிறார் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். “கொலாவரி டி” என்ற பாடல் மூலம் 2011-ம் ஆண்டு இந்திய அளவில் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், இப்போது இந்தியாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். இசையமைப்பதோடு மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடத்தி, “ராக்கிங்” இசையை நேரடியாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட அனிருத் தற்பொழுது தென்னிந்திய சினிமாவை தாண்டி, பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வருகிறார். ஹிந்தி சினிமாவில் ‘ஜவான்’, ‘லியோ’ போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பின்னணி இசையை வழங்கியதோடு, தற்போது கன்னடத் திரையுலகிலும் தனது அறிமுகத்தை விரைவில் நிகழ்த்த உள்ளார். இந்த நிலையில், அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படி இருக்க, அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு ‘Hukum Tour’ என பெயரிட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அனிருத்தின் பிரமாண்ட இசையில் நேரடி அனுபவத்தில், ரசிகர்கள் அடைந்துவிடும் அனுபவம் அட்டகாசமாகவே இருக்கும்.

அவரது ‘Hukum’ கச்சேரிகள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கிடையில், வருகிற ஜூலை 26ஆம் தேதி, சென்னையின் அருகில் உள்ள திருவிடந்தையில் பிரமாண்ட அளவில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் டிக்கெட்டுகள் வெளியான சில நாட்களிலேயே ‘ஸோல்ட் அவுட்’ ஆகி விட்டன. அதிக வரவேற்பு காரணமாக, கூடுதல் சீட்டுகளுக்கான தேவை உருவானது. இதனால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வசதிக்குறைவுகள் ஏற்படக்கூடும் என ஏற்பாட்டாளர்கள் கருதி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாற்றும் முடிவை எடுத்துள்ளனர். இதனை குறித்து, அனிருத் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரசிகர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்,

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சியின்போது நேர்ந்த விபரீதம்.. அமெரிக்கா சென்ற ஷாருக்கான்..!! ரசிகர்கள் வருத்தம்..!

அவரது பதிவில், " அன்பான ஹுகும் குடும்பத்தினருக்கு, உங்கள் அளவில்லா அன்பும், அபாரமான ஆதரவும் காரணமாக, வரும் ஜூலை 26-ஆம் தேதி திருவிடந்தையில் நடைபெற இருந்த ஹுகும் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் பெரிய இடம், சிறந்த அனுபவம், வசதியான நுழைவு, அதிகமான இடவசதி, மேலும் அதிக ஆற்றலுடன் நிகழ்ச்சி நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரிக்கும் பொறுமைக்கும் மிக்க நன்றி. மிக விரைவில், இன்னும் பெரிய அளவில், இன்னும் சிறப்பாக, இன்னும் மெருகாக நாம் திரும்ப வருகிறோம்" என பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானவுடன், அனிருத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #HukumChennai, #AnirudhConcert போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி தங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு முன்பே பலர் பயண ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பதால், சிலர் குழப்பத்துடன் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த மாற்றத்தை வரவேற்கவும் செய்துள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் 10,000 முதல் 20,000 ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ப அனிருத் தனது குழுவுடன் இணைந்து இன்னும் சிறந்த இடம் தேடி வருகின்றனர். ஏற்பாட்டாளர்கள் உறுதியாக, புதிய தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பை மிக விரைவில் வெளியிட இருக்கின்றனர். அனைவரது கவனத்தையும் பெற்ற, இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டாலும், ரசிகர்களிடம் இருந்த ஆவலும், ஆர்வமும் குறையவில்லை.

அனிருத் தனது ரசிகர்களை மையமாகக் கொண்டு இசையை நேரில் வழங்கும் விதத்தில் மேற்கொண்ட முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.  அனிருத் தனது இசையில் ஒரு தனித்துவமான சக்தியை கொண்டவர். அவரது இசை புதுமையை மட்டுமல்ல, இயக்குநர்களின் பார்வையை விரிவுபடுத்தும் வகையில் உருவாகிறது. மேலும் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அதே டிக்கெட்டுடன் நிகழ்ச்சியை காணமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் கச்சேரி அனுபவம் பெற விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட் காலமானார்.. சோகத்தில் தெலுங்கு திரையுலகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share