×
 

சேலையில் செம அழகு..!! ‘அழகே அழகே’ நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

‘அழகே அழகே’ சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.

சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் அன்ஷிதா.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகே அழகே’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் இவர், ஏற்கனவே ‘செல்லம்மா’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர்.

சீரியல் மட்டுமின்றி, பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யும் சமந்தா..!! என் ஒர்க்அவுட்டை யாரும் பின்பற்றாதீங்க.. நடிகை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!


சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அன்ஷிதா, அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சேலை போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

சின்னத்திரை ரசிகர்களுக்கு அன்ஷிதா புதுமுகம் கிடையாது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் நடித்ததன் மூலம் அவர் கணிசமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

சீரியல்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைப்பது என்பதும் நடிகர்களுக்கு முக்கியமான சவாலாக இருக்கும். அந்த வகையில் ‘செல்லம்மா’ சீரியலில் தனது நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்த அன்ஷிதா, அடுத்தடுத்து சின்னத்திரையில் முக்கியமான வாய்ப்புகளை பெற்றார்.

 

இதையும் படிங்க: உடலில் இறங்கிய 20 புல்லட்.. துடிதுடித்து இறந்த பாடகர் அங்கித் பால்யான்..!! காரணம்.. அரசியல் பகையா? தாதா கும்பலா?.. ஷாக்கில் போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share