மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தின் மாபெரும் வெற்றிப் படமான பிரேமம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
இப்படத்தில் அவரை கண்ட பின் பல இளைஞர்கள் அனுபமா போல் தனக்கு காதலி வேண்டும் என பித்து பிடித்து சுற்றினர்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகையில் அழகிய சேலையில் மின்னும் நடிகை மாளவிகா மோகனன்..!
அதன் பின்னர் பிருத்விராஜ் மற்றும் வேதிகா நடித்த "ஜேம்ஸ் & ஆலிஸ்" என்ற மலையாளப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
மலையாளத்தை அடுத்து தெலுங்கில் அனுபாமாவிற்கு வாய்ப்பு கிடைக்க, நிதின் மற்றும் சமந்தா ரூத் பிரபுவுடன் "ஆ..ஆ" என்ற படத்தில் நடித்து,
அதன் பின் தனது முதல் மலையாள படமானா பிரேம் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து கொடுத்தார்.
இப்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான அனுபமா, எப்பொழுது தமில் திரையுலகில் தோன்றுவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த பொழுது,
திடீரென தனுஷ் நடிப்பில் வெளியான டபுள் ஆக்ஷன் படமான "கொடி" என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். ரசிகர்களை மட்டுமல்லாமல் அப்படத்தில் த்ரிஷாயவையே அலற விட்டார்.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியானது “பேபி கேர்ள்” படத்தின் பர்ஸ்ட் லுக்..! நிவின் பாலிக்கு குவியும் பாராட்டுக்கள்..!