நான் வந்துட்டல்ல.. இனிமே தான் சினிமா சூடு பிடிக்க போகுது - லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா ஓபன் டாக்..!
லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தனது சினிமா வருகை மற்றும் கதை தேர்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி, தன் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியான "காதி" திரைப்படத்துக்காக மீண்டும் ரசிகர்களுக்கு முன் வந்துள்ளார். பாகுபலி, அருந்ததி, போன்ற படங்களில் தன்னை உறுதியான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரங்களின் வழியாக உற்சாகமாக நிரூபித்த அனுஷ்கா, ‘காதி’ என்ற புதிய முயற்சியில் வித்தியாசமான தோற்றத்திலும், மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் இடம்பெற்று இருக்கிறார்.
இப்படி இருக்க இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், மகளிர் குற்றவியல் விசாரணைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சமூக அக்கறைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா, ஒரு கடுமையான அதிரடிப் பெண் அதிகாரி போன்று தோன்றும் இந்த கதாபாத்திரத்துக்கு, தனது நடிப்பு, தோற்றம், உடல் மொழி மற்றும் மனநிலையை முழுமையாக மாற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. படத்தின் ரிலீஸை முன்னிட்டு அனுஷ்கா அளித்த விரிவான பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. அதில், தனது நடிப்பு பயணம், மனநிலை, கதையின்மீது ஆசை, சினிமா தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல அம்சங்களை நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் “சூட்டிங் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் எனக்கு பதட்டமாக இருக்கும். அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாது. பொதுவாக ஒரு வாரம் கழித்து நன்றாகவே இருக்கும். அதே போல, படம் ரிலீஸ் ஆகும் முன்னும், பின்னும் எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். போக போக சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதும் அந்த பயம் அப்படியேதான் இருக்கிறது. ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை, இயக்குனர் கிரிஷ் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரங்களை கொடுத்து இருக்கிறார்.
காதி படக்கதையை என்னிடம் சொன்ன போது, ‘இது எனக்குக் கிடைக்கும்’ என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று அவர் ஊக்கப்படுத்தினார். கதை என்னை உற்சாகப்படுத்த வேண்டும். பாகுபலிக்குப் பிறகு நான் கதையை எப்படிப் பார்க்கிறேன் என்பதை மாற்றினேன். பாகுபலிக்குப் பிறகு எனது கதைத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். கதை என்னை வசீகரிக்க வேண்டும்.
ஒரு படத்துக்காக 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை செலவிடுகிறேன் என்றால், அது என் வாழ்க்கையின் ஒரு வருடமாகும். அதை திரும்பப் பெற முடியாது. எனவே, அந்த நேரம் நியாயமாகவும் அர்த்தமுள்ளவையாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நாளை படம் ரிலீஸ்.. இன்று மாஸாக வெளியான அனுஷ்காவின் “காட்டி” கிளிம்ப்ஸ் வீடியோ..!!
அனுஷ்காவின் இந்த வார்த்தைகள், ஒரு நடிகை தனது நேரத்தையும் வாழ்க்கையையும் கதை ஒன்றுக்காக ஒதுக்கும் போது அதில் எதிர்பார்க்கும் தரமான தருணங்களை வெளிப்படுத்துகிறது. பொதுவாக திரைப்பட நடிகைகள் சமூக வலைதளங்களில் மிகுந்த செயல்பாடுகளோடு இருக்கின்றனர். ஆனால் அனுஷ்கா மட்டும் சிறந்த விலகலுடன், தனிமையை விரும்பும் தன்மையுடன் இருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, தனிமையில் இருப்பதையே விரும்புவேன். சமூக ஊடகங்களில் நான் சுறுசுறுப்பாக இல்லை. ஒவ்வொரு நாளும் அதில் என்ன சொல்லிக்கொண்டிருப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கை மிகவும் எளிமையானது மற்றும் சலிப்பானது” என்றார். இவ்வாறு கூறியுள்ள அனுஷ்கா, அடுத்த தலைமுறை சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பதை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறுகிறார். ஆகவே ‘காதி’ படத்தின் மூலம் அனுஷ்கா தனது சிறப்பான கதைத்தேர்வு மற்றும் தெளிவான நடிப்பு நெறிமுறைகளை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் கூறும் பேட்டி, ஒரு நடிகையின் உண்மையான பயணத்தை, நெகிழ்வையும், அடையாளங்களையும் வெளிக்கொண்டு வருகிறது.
“ஒரு கதைக்கு என் நேரத்தை கொடுப்பதற்கான காரணம் அதற்குள் இருக்கும் உண்மை. அந்த உண்மையை நான் உணர்ந்தால்தான் அது மெய்ப்படுகிறது. அப்போதுதான் நான் ஒரு நடிகையாக இருக்க முடியும் என அவர் கூறியது பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50-வது படமான ‘காதி’..! டிரெய்லர் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!