×
 

பயத்தை தூண்டும் அவதார் - 3...! ‘Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. டிரெய்லர் விரைவில்...!

‘Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவாகும் மெகா புரொடக்‌ஷன் திரைப்படமான ‘அவதார்’ படத்தின் மூன்றாவது பாகமான ‘Avatar: Fire and Ash’ திரைப்படம் வரும் டிசம்பர் 19 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமான ‘அவதார்’ படம், உலகளவில் திரைப்பட வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பண்டோரா எனும் கற்பனை கிரகத்தில் நடைபெறும் அதிசயமான மற்றும் செயற்கை அறிவியல் சார்ந்த கதைக்களம், அற்புதமான கிராபிக்ஸ், விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நவீனமான 3D தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 2.9 பில்லியன் டாலர்களை வசூலித்து, சாதனை புரிந்து, 3 ஆஸ்கார் விருதுகள் பெற்ற வெற்றி திரைப்படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிய ‘Avatar: The Way of Water’ எனும் இரண்டாம் பாகமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 13 வருட இடைவெளிக்குப் பிறகு வந்திருந்தாலும், பாகம் 2 அதன் முன் படத்தை போலவே பார்வையாளர்களை அசத்தி, வசூலில் 2.3 பில்லியன் டாலர்களைத் தாண்டி உலகளாவில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில், தற்போது ‘Avatar: Fire and Ash’ எனும் மூன்றாவது பாகத்தின் புதிய அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பண்டோரா கிரகத்தின் புதிய பகுதிகள், புதிய கேரக்டர்களின் சாயல்கள், மற்றும் தீ, சாம்பல் எனும் கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய அம்சங்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘The Fantastic Four: First Steps’ எனும் மற்றொரு ஹாலிவுட் திரைப்படம் ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த படம் வெளியாகும் நேரத்தில் ‘Avatar: Fire and Ash’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் திரையரங்குகளில் காட்சியளிக்கப்படும் என 20th Century Studios மற்றும் Lightstorm Entertainment நிறுவனங்கள் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த தகவல் வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டம் காணப்படுகிறது.

இதையும் படிங்க: அதிரடியாக பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தன்னா..! புதிய பிராண்ட் அறிமுகம்...விஜய் தேவரகொண்டா வாழ்த்து...!

ஜேக் சுல்லி, நெய்திரி மற்றும் அவரது குடும்பத்தின் போராட்டம் மற்றும் பண்டோராவின் மீதான மனிதர்களின் தாக்குதல் ஆகியவை இந்த படத்தில் எந்த அளவுக்கு விவரிக்கப்படும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ஜேம்ஸ் கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தின் திரைக்கதை ஒரு முக்கியமான மாற்றுமுகமாக அமையும் என்றும், பண்டோரா கிரகத்தின் இன்னும் ஆழமான பகுதிகளை மற்றும் அதில் வாழும் பல்வேறு இனங்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், மற்றும் உள் அரசியல் கலகலப்புகளைப் படமாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வரை கிடைத்த தகவலின்படி, Avatar 3 திரைப்படம் முக்கியமான புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் ஃபைர் நவே, எனப்படும் தீ அடிப்படையிலான நவீன இனத்தினரை நமக்குப் ப்ர்டாமா முறையாக அறிமுகம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதுவே "Fire and Ash" எனும் தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. இந்த நிலையில், டிசம்பர் மாதம், ஹாலிவுட் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் பிரமாண்ட விற்பனை சந்தைகள் அனைத்தும் ‘Avatar: Fire and Ash’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.

மொத்தத்தில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் ‘அவதார் 3’ திரைப்படம், உலக திரைப்பட வரலாற்றில் இன்னொரு மாபெரும் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 19-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 

இதையும் படிங்க: அன்னைக்கு காசு இல்ல.. பிளாட்பாரம் தான் படுக்கை..! ரஜினி நட்பு குறித்து பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share