"கூலி" திரைப்பட வெளியீட்டிற்கு தடை..! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
கூலி திரைப்படம் இணையதளங்களில் வெளியிடகூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் கூட்டணியாக இணைந்து உருவாக்கியுள்ள 'கூலி' திரைப்படம், உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளில் உள்ள திரைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. ரிலீஸுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவுகள் மூலம் மட்டும் ரூ.50 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட இந்த கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தைத் தாண்டி பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அவர்களில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர். இது ஒரு பன்முகதிறன் கொண்ட நட்சத்திர பட்டாளமாக இருப்பதோடு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், "கூலி" திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டில் ஒன்றை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மொத்தம் 36 இணையதள சேவை வழங்குநர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், சட்டவிரோதமாக திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பதிவிறக்கும் முயற்சிகளை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி இருக்க “கூலி” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்படும்போது, உரிமையாளரின் பொருளாதார மற்றும் கலைமிக்க உரிமைகள் பாதிக்கப்படும் என்பதை நீதிமன்றம் எடுத்துரைத்தது. இவ்வகையான இணையவழி பைரசி நடவடிக்கைகள் தமிழ் திரைப்படத் துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையும் படிங்க: அதிசயம் ஆனால் உண்மை..! '1' மணி நேரத்தில் இவ்வளவு டிக்கெட் முன்பதிவா.. சாதனை படைத்த "கூலி" டீம்..!
எனவே பட வெளியீடு மற்றும் அதன் பிறகும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், இணையத்தில் வெளியானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைப்படங்களை நேர்மையாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் உறுதியளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பைரசி என்பது படக்குழுவின் பல மாதங்கள் நீண்ட உழைப்பை பறிக்கும் செயல் என, திரையுலகக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் “கூலி” திரைப்படத்தை திரையரங்குகளில் நேரில் சென்று காண வேண்டும் என்றும், இணைய பைரசியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்பதை முற்றிலுமாக வலியுறுத்துகிறது இந்த நீதிமன்ற தீர்ப்பு. எனவே கூலி திரைப்படம், ஒரு வெறும் திரைபடமாக இல்லாமல், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயமாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள படமாக பார்க்கப்படுகிறது. அதன் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இணைய பைரசியை தடுக்க நீதிமன்றம் எடுத்துள்ள இந்த தீர்ப்பு, திரையுலகத்திற்கு ஒரு முன்னுதாரணமாகும்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர். திரையரங்குகளுக்கு செல்லுங்கள். சிறந்த அனுபவத்தை நேரில் பெறுங்கள். தமிழ் சினிமாவை ஆதரியுங்கள். என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "கூலி" படத்தில் கதாநாயகி கொலை செய்யப்படுவாரா..! நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!