×
 

தோல்வியால் கிடைத்த பலன்...மெய் சிலிர்க்க வைத்த நடிகை பூமி பெட்னேகர் பேச்சு..!

நடிகை பூமி பெட்னேகர் தோல்வியால் கிடைத்தது தான் தனது வெற்றிகள் என மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

சமூக ஊடகங்கள் இன்று உலகின் முக்கிய ஊடக வலையமைப்பாக மாறியுள்ள நிலையில், அந்த இடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தைரியமாக தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட போதே, அவர் இந்த பரபரப்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பூமி பெட்னேகர் தற்போது “தல்தல்” எனும் புதிய வெப் தொடரில் ஒரு போலீஸ் அதிகாரியாக மாறி நடித்து வருகிறார்.

இந்த தொடரின் முதற்கட்ட விளம்பர நிகழ்வாக நடைபெற்ற விழாவில்தான் அவர் டிரோல்கள், சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பேசினார். “தல்தல்” என்ற வெப் தொடரில் பூமி பெட்னேகர் மைய கதாபாத்திரமாக நடிக்கிறார். இதில் அவர் கடமைக்கு உரிய நேர்மை, கடுமையான முடிவுகள், மற்றும் சட்டத்தின் வழியில் நீதி தேடும் ஒரு போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறார். இது அவரது நடிப்பில் ஒரு புதிய பரிமாணம் என ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர். “தல்தல்” வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோ பிளாட்பார்மில் வெளியிடப்பட உள்ளது. இதை ஒட்டி நடந்த நிகழ்வில் தான் அவர் தனது சமூக கருத்துகளையும் வெளிப்படுத்தினார். விழாவின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, பூமி பெட்னேகர் மிகவும் உணர்வுபூர்வமாக பேசினார்.

அதன்படி அவர் பேசுகையில், “டிரோல்களுக்கு நான் பழகிவிட்டேன். முன்பு அதை சமாளிக்க எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு தைரியம் இல்லை. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது,” என்றார் அவர். அதன்பின், “நான் பல்வேறு வகையான விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். சமூக ஊடகங்களில் நானே பார்த்திருக்கிறேன் – பெண்கள் மீது பலவகையான திட்டவட்டமான மற்றும் கீழ்த்தரமான கருத்துகள் பகிரப்படும். இது ஒரு தவறான கலாச்சாரம். ஒரு பெண் தனது உடல் அமைப்பு, உடை, கருத்து, சுதந்திரம் போன்ற விஷயங்களில் சற்று வேறுபட்ட நெருங்கும் என்பதற்காக, அவளின் மீதான தாக்குதல் நடக்கிறது. இது நம்மை அதிகம் சிந்திக்க வைக்கும். ஆனால் தற்போது, என்னை பற்றிய டிரோல்களை என்னால் கையாள முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஓவர் காண்பிடன்ட் தான்..! அப்பவும் இப்பவும் எப்பவும் என் படம் ஹிட் தான் - கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு..!

இப்படிப்பட்ட “வாழ்க்கையில் தோல்விகள், வெற்றிகளை விட எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்துள்ளன. நினைத்ததை விட நான் மிகவும் உறுதி கொண்டவர் என்பதை அவை எனக்குக் காட்டியுள்ளன,” எனும் வாக்கியத்தின் மூலம் அவர் தனது ஆளுமையை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த எண்ணங்கள் அவரது மனதின் ஆழத்திலிருந்து வரும் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகின்றன. இப்படி இருக்க பூமி பேச்சின் முக்கிய அம்சம் – சமூக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் கலாசாரம். இது சமகால இந்திய சினிமா மற்றும் சமூகத்தில் பெரும் விவாதமாக வளர்ந்துள்ளது. திரைப்பட நடிகைகள் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள், சமூக ஊடகங்களின் வழியாக பலவிதமான மன அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். உடல் அமைப்பு, தோற்றம், உடை, மனம் மற்றும் வாழ்க்கை தேர்வுகள் போன்றவற்றுக்காக ஒரு பெண் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறாள். இது அவர்களுக்கு தனிப்பட்ட மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

இந்த விடயங்களை பொதுவெளியில் பேசும் நடிகைகள் தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே பூமி பெட்னேகர் தனது திரைப்பயணத்தில் பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவரது முதல் படமான Dum Laga Ke Haisha படத்தில் உடல் பருமன் உள்ள ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து, சமூக பார்வைகள் கொண்ட திரைப்படங்கள் வரை அவரது தேர்வுகள் ஒவ்வொன்றும் பிரச்சனைகளை முன்வைக்கும் வகையில் இருந்திருக்கின்றன. அவர் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான “The Royals” என்ற தொடரில் இஷான் கட்டருடன் இணைந்து நடித்திருந்தார். அதுவும் சமூக கட்டமைப்பை சுட்டிக் காட்டும் கதையமைப்பில் அமைந்திருந்தது. இப்போது பல நடிகைகள் தங்கள் மனதிலுள்ள எண்ணங்களை தயக்கமின்றி பகிர்ந்து வருகின்றனர்.

பூமி பெட்னேகரின் பேச்சும் அதையே ஒட்டியுள்ளது. “நாம் மவுனமாக இருந்தால் நம்மை யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால் நாம் பேச ஆரம்பித்தால் தான் மாற்றம் வரத் தொடங்கும். சமூக ஊடகங்கள் வெறும் கேலி செய்யும் இடமாக இருந்தால் அது ஒரு சாமானிய டிரெண்டாகவே ஆகிவிடும். நம் குரலை பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் சுருக்கமாக கூறினார். ஆகவே பூமி பெட்னேகரின் உரையாடல் ஒரு பொது நிகழ்வில் நடந்தாலும், அது பெருமளவில் சமூகத்தில் சிந்திக்க வைக்கும் ஒரு உரையாக மாறியுள்ளது. திரைத்துறையின் பிரபல முகமாக இருந்தாலும், அவர் இன்று பெண்களின் மனஅழுத்தம், டிரோல்கள், மற்றும் வாழ்க்கை சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசுவது – அவரது சமூகப் பொறுப்புணர்வை காட்டுகிறது.

அவரின் நம்பிக்கையும் தைரியமும், இன்று பல பெண்களுக்கு ஒரு தூண்டுதலாகவும் காணப்படுகிறது. “நான் என்னை நேசிக்கக் கற்றுக்கொண்டேன். அதுவே டிரோல்களை கடக்க வைக்கும் முதல் படி” என அவர் கூறிய வரிகள் இன்றைய சமூகத்துக்கு தேவையான நுட்பமான உண்மையாகவே தெரிகின்றது.

இதையும் படிங்க: இடுப்பை வளைத்து நெளித்து ஆடியதால் தான் இப்படி இருக்கேன்..! நடிகை தமன்னா ஓபன் டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share