×
 

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஸ்ருத்திகா...! அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா..!

நடிகை ஸ்ருத்திகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகை ஸ்ருத்திகா அருண், சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் ஆன இவர், அதன் பின்னர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, தேசிய அளவிலும் பிரபலமானார்.

அதன்பின் ஹிந்தி பேசும் ரசிகர்களிடமும் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால் தற்போது ஸ்ருத்திகா தனது உடல்நல பிரச்சனையைப் பற்றிய அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு வெளியிட்ட அவர், தன்னிடம் இருந்த பெரும் உடல் பிரச்சனைக்காக சமீபத்தில் முக்கியமான அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், அந்த பிரச்சனை பற்றிய முழு விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. அந்த வீடியோவில் ஸ்ருத்திகா தெரிவிக்கையில், “ஒரு வருடம் முன்பு, இதே நாளில் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். அது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த அனுபவம் எனது மனவலிமை, பொறுமை, உணர்ச்சிகளை சோதித்தது.

இன்று, அதே நாளில், நான் ஒரு முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருக்கிறேன் — கேமரா, ஒளி, ரசிகர்கள் அல்ல, மருத்துவர்கள், நர்ஸ்கள், மற்றும் குணமடைதலின் அமைதியான சூழலில். கடந்த சில மாதங்களாக உடலில் இருந்த ஒரு சிக்கலான பிரச்சனைக்காக நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன். இது என் வாழ்க்கையில் இன்னொரு திருப்பமாக மாறியது,” என அவர் உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பற்றியும் ஸ்ருத்திகா பெரும் நன்றி தெரிவித்துள்ளார். aakashhospital_tvt என்ற மருத்துவமனையில் டாக்டர்.பிரியா லக்ஷ்மணன் என்ற திறமையான அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் தான் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார். “அந்த டாக்டர் மிகவும் எளிமையானவர். ஆனால் அவரின் எளிமையின் பின்னால் ஆயிரக்கணக்கான வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைகளின் அனுபவம் இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் மனநல தூதர்..! அட..!! இந்த பிரபல நடிகையா..!!

பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு அவர் பல நாடுகளில் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார். எனது சிகிச்சையையும் அவர் மிக எளிதாக, கடவுளின் கரங்கள் வழிநடத்தியது போல செய்து முடித்தார்,” என்று ஸ்ருத்திகா புகழ்ந்துள்ளார். மேலும், “என்னை மட்டுமல்ல, எனது குடும்பத்தினரையும் மருத்துவமனையினர் மிகுந்த அன்புடன் கவனித்தனர். அவர்கள் எனது உணவும், குடும்பத்தினரின் உணவும் அனைத்தையும் அன்புடன் பராமரித்தனர். அந்த மருத்துவமனை ஒரு மருத்துவமனை போல இல்லாமல், ஒரு வீடு போலவே உணர வைத்தது. குறிப்பாக குயின் நர்ஸ் மற்றும் அனைத்து பணியாளர்களும் காட்டிய பொறுமை, அர்ப்பணிப்பு என இவை அனைத்தும் எனக்கு உண்மையான மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்தின,” என அவர் நன்றியுடன் கூறியுள்ளார்.

இப்படி இருக்க தனது அறுவைச் சிகிச்சைக்கு முன்பே அவர் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகவும், தனது உடல் பிரச்சனை பற்றி வெளிப்படையாக சொல்லாமல் அமைதியாக எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். “எனது உடல் பிரச்சனையை கடவுளும், எனது சில நெருங்கியவர்களும் மட்டுமே அறிந்தனர். ஆனால், கடவுள் எனக்கு தைரியமும் வலிமையும் கொடுத்தார். அதனால் தான் எந்த குறையும் காட்டாமல், நான் சிரித்து, பணியாற்றி வந்தேன். இன்று அந்த கடவுள் என்னை குணப்படுத்தி வருகிறார்,” என அவர் பதிவிட்டுள்ளார். இப்படியாக தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு ஸ்ருத்திகா மேலும் “இப்போது நான் முழுமையாக குணமடைந்து மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் இருக்கிறேன்.

ஆனால் இன்னும் இரட்டிப்பு உற்சாகத்துடன், இரட்டிப்பு முயற்சியுடன் வாழ விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நடந்த இந்த அனுபவம் நன்றி மற்றும் நம்பிக்கை என்னும் இரண்டு முக்கியமான உணர்வுகளை என்னுள் நிலைப்படுத்தியுள்ளது. இன்று என் இதயம் நன்றியால் நிரம்பியுள்ளது என் பிரார்த்தனை — அமைதியான வலிமை,” என அவர் கூறியுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி, அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ருத்திகா தற்போது ஓய்வில் இருந்து கொண்டிருக்கிறார். உடல்நிலை முழுமையாக சீராகியதும், மீண்டும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: செம ஹாட் உடையில் இளசுகளை கவரும் நடிகை சோபிதா துலிபாலா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share