பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு… டாஸ்க்கின்போது மயங்கி விழுந்த அக்ஷிதா.!! கலங்கிப்போன அவினாஷ் – இன்றைய புரொமோவில் அதிர்ச்சி சம்பவம்..!
அக்ஷிதா டாஸ்க்கின்போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10, நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆரம்பத்தில் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து நடைபெற்ற எலிமினேஷன்களைத் தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.
போட்டி தொடங்கி 54 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும், பிக்பாஸ் 10 டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே பிக்பாஸ் கொடுத்து வரும் வித்தியாசமான டாஸ்க்குகளும், அதனால் வீட்டிற்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகளும் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 'கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ்' என்ற பெயரில் புதிய டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் இரு அணியினருக்கும் இடையே கடுமையான மோதல்கள், வாக்குவாதங்கள் என வீடு பரபரப்பாகக் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதையும் படிங்க: கிளாமர் உடையில் தேவதை போல வந்த நடிகை நஸ்ரியா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் புரொமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'பாலை தள்ளு கோலை அல்லு' என்ற புதிய டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இரு அணியினரும் ஒருவருக்கொருவர் கடுமையாகப் போட்டியிட்டு விளையாடுகின்றனர். டாஸ்க் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெறுகிறது.
அதாவது, போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அக்ஷிதா திடீரென மயங்கி கீழே விழுகிறார். இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் பதறிப்போய் உடனடியாக அவரைச் சுற்றி வருகின்றனர். பின்னர் அவரை மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். விளையாட்டாகத் தொடங்கிய டாஸ்க் இப்படி ஒரு எதிர்பாராத சம்பவத்தில் முடிந்ததால் பிக்பாஸ் வீடே ஒருகணம் பரபரப்பாக மாறுகிறது.
குறிப்பாக, அக்ஷிதா மயங்கி விழுந்ததைக் கண்டு அவினாஷ் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார். அவருடைய பதற்றத்தையும் கவலையையும் புரிந்துகொண்ட பிக்பாஸ், அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்துகிறார். இந்தக் காட்சிகள் புரொமோவில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ் டாஸ்க்கால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் நிலையில், தற்போது அக்ஷிதாவுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் போட்டியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது எப்படி இருக்கிறார், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் விளையாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதற்கான முழுமையான பதில் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்க்கில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் கவர்ச்சி லுக்கில் நடிகை வாணி போஜன்..!! இணையத்தில் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!